பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 262. ஆண் பெண் பலரென முப்பாற் றுயர் தினே. என வரும் சூத்திரத்தாற் கூறினர் நன்னூலார். க. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் ருயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. இஃது அஃறிணையுட் பால்வகையினே உணர்த்துகின்றது. (இ-ள்) ஒன்றனயறியுஞ் சொல்லும் பலவற்றை யறியுஞ் சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையிடத்தனவாம். எ-று. அஃறிணைச் சொற்கள் ஒன்று, பல என்னும் இருபால்களாகப் பகுத்துரைக்கப் படுவன என்பதனே, 263. ஒன்றே பலவென் றிருபாற் றஃறினே. என்பதனுற் குறித்தார் நன்னூலார். அஃறிணைக் கண்ணும் சேவல், களிறு முதலிய ஆண்பாலும் பெடை பிடி முதலிய பெண்பாலும் உளவாயினும், அவ்வாண்மை பெண்மையாகிய வேறுபாடுகள் உயிருள்ளனவற்றுட் சிலவற்றுக்கும் உயிரில்லன. வற்றுக்கும் இன்மையான் அப்பகுப்பொழித்து எல்லா வற்றிற்கும் பொருந்த ஒன்றன்பாலாகக் கூறி ஆர். ச. பெண் மை சுட்டிய வுயர் தினே மருங்கின் ஆண்மை திரிந்த பெயர் நிலேக் கிளவியுந் தெய்வ ஞ் ட்டிய பெயர் நிலைக் கிளவியும் இவ்வென வறியு மந்தந்த மக் கிலவே உயர் தினே மருங்கிற் பால் பிரிந் திசைக்கும். இது, பாலுளடங்காத பேடியையும் தினேயுளடங்காத தெய்வத்தையும் பாலுள்ளுந் தினேயுள்ளும் அடக்குதல் நுதலிற்று. (இ-ள்) உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மைகுறித்த ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறித்த