பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 (இ.ஸ்) மேற்கூறப்பட்ட காலம் மூன்றென்று சொல்லுவர் புலவர். எ-று. தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. உள. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்ரு அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. இது, முற் குறித்த காலத்தின் வகையும் அதுதான் குறிப்பிற் கும் உண்டென்பதும் உணர்த்துகின்றது. (இ~ள்) மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று சொல்லப்படும் அம்மூன்று காலமும் குறிப்பொடும் பொருந்தும் பொருள் நிலைமையையுடையன; வினைச்சொல்லானவை தோன்று நெறிக்கண். எ-று. எனவே, காலம் மூன்ருவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பது உம், வெளிப்படக் காலம் விளங்கா தன குறிப்புவி இன என்பது உம் பெற்ரும். (உ-ம்) உண்டான், உண்ணுநின்றன், உண்பான் என் பன முறையெ மூன்று காலமுந் தோன்ற நின்றன. கரியன், செய்யன் என்பன வினைக்குறிப்பு. இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெருத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழில் என்பது பொருளினது புடைபெயர்ச்சியாகலின் அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நீடித்து. நில்லாமையின், நிகழ்ச்சி யென்பதொன்று அதற்கில்ஆல. எனினும், உண்டல் தின்றல் எனப் பலதொழிற் ருெகுதியை ஒரு தொழிலாகக் கொள்ளுதலின், உண்ணுநின்றன், வாரா நின் ருன் என நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று என்பர் சேவைரையர்,