பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 வினைக்குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டு கரியன், இது பொழுது கரியன் என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையே தோன்ற வருதலும், நாளேக் கரியனும் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக. இங்குக் கூறப்பட்ட காலத்தின் பெயரும் முறையும் தொகை யும் ஆகியவற்றை, 881, இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் பவணந்திமுனிவர். யாதொரு பொருளும், தோன்றுமளவிற் ருேன்றி, வளரு மளவின் வளர்ந்து, முதிருமளவின் முதிர்ந்து அழியுமளவின் அழியுமன்றி, உயிர்கள் வேண்டியவாறு ஆகாமையின், அவற்றை அவ்வளவின் அவ்வாறு இயற்றுவது காலம் என்னும் அருவப் பொருளாமெனவும், அதல்ை இயலும் பொருள்களின் தொழில் இறந்ததும் எதிர்வதும் நிகழ்வதுமாதலின் அவ்வாறு இயற்றுங் காலமும் இறப்பு, எதிர்வு, நிகழ்வு என் மூன்று கூற்றதாம் எனவும் உய்த்துணர்ந்துரைப்டார், காலம் இன்றென் றும் இரண்டென்றும் கூறுவார் கூற்றை விலக்கிக் காலம் மூன்றே எனத் தெளிந்துரைத்தார். உளக. குறிப்பினும் வினேயினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினேச்சொ லெல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறினேக் குரிமையும் ஆயிரு தினேக்குமோ ரன்ன வுரிமையும் அம்மு வுருபின தோன்ற லாறே. இது, வினைச்சொற்களது பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்) குறிப்புப் பொருண்மைக்கண்ணும் தொழிற் பொருண்மைக் கண்ணுந் தோன்றிக் காலத்தொடு வரும் எல்லா வினேச்சொல்லும், உயர்திணைக் குரியனவும், அஃறிணைக் குரியனவும் அவ்விரண்டு திணைக்கும் ஒப்பவுரியனவும் என மூன்று பகுதியனவாம்; அவை தோன்றும் நெறிக்கண். எ-று.