பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கரியன், செய்யன் என்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலின் குறிப்பு: என்ருர் . (உ-ம்) உண்டான், கரியன் எனவும், சென்றது, செய்யது எனவும், வந்தனே, வெளியை எனவும் மூவகை வினையும் முறையே வந்தன. குறிப்பொடுங் கொள்ளும் என மேலேச் சூத்திரத்துக் குறிப்பு இயைபுபட்டு நிற்றலின் குறிப்பினும் வினேயினும்: என்ருர். பின்னர் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்ச்ொற்களே, இஃது இறந்த காலத்திற் குரியது, இது நிகழ்காலத்திற் குரியது, இஃது எதிர்காலத்திற்குரியது என வழக்கு நோக்கி உணர்ந்து கொள்க என அறிவுறுத்துவார், காலமெர்டு வரூஉம் வினைச் சொல் என்ருர். வினைச் சொல் காலம் உணர்த்துங்கால் சில நெறிப்பாடுடையன என்ப்துணர்த்துவார் நெறிப்படத்தோன்றி? என்ருர், நெறிப்பாடாவது ஈற்றுமிசை (விகுதியின்மேல்) நிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்றவுணர்த்தலாகாமையின் தொல்காப்பியத்தில் விரித்துரைக்கப்படாவாயின. எனினும் தொல்காப்பிய வுரையாசிரியர்கள் ஆங்காங்கே யுணர்த்திச் செல்வர். மேல் தெரிநிலே குறிப்பு எனத் தொகுத்துணர்த்திய வினைச் சொற்கள் முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என மூவகை யாகித் திணை பால் இடங்களில் ஒன்றற்கு உரியனவாகவும் பொதுவாய் நிற்பனவாகவும் வருதலே, 321. அவைதாம், முற்றும் பெயர் வினே யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். என்னும் சூத்திரத்தால் உணர்த்தினர் நன்னூலார். உளஉ. அவைதாம், அம்மா மெம்மே மென்னுங் கிளவியும் உம்மொடு வரூஉங் கடதற வென்னும் அந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே.