பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忽3罗 உம்மூர் கடதற விருபா லாரையும் தன்னெடு படுக்குந் தன்மைப் பன்மை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அம் ஆம் என்னும் இவ்விரு விகுதியினையும் இறுதியாக வுடைய சொற்கள் முன்னிலையிடத்தாரையும், எம், ஏம், ஒம் என்னும் இம்மூன்று விகுதியினையும் இறுதியாகவுடைய சொற் கள் படர்க்கையிடத்தாரையும், கும், டும், தும், றும் என்னும் இந்நான்கு விகுதியினையும் இறுதியாகவுடைய சொற்கள் முன்னிலை படர்க்கையென்னும் ஈரிடத்தாரையும் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினேமுற்றுங் குறிப்புமுற்று மாகும்?’ என்பது இதன்பொருள். ஓம் விகுதி புதியன புகுதலாக ஈண்டுக் கொள்ளப்பட்டமை காண்க. ஓம் விகுதியையும் வழக்குண்மையிற் கொண்டார் என்பர் மயிலேநாதர். (உ-ம்) உண்டனம், உண்ண நின்றனம், உண்பம், தாரி னம், உண்பாம், தாரினும், உண்டாம், உண்ணு நின்ரும் யானும் நீயும் எனவும், உண்டனெம், உண்ண நின்றனெம், உண்பெம், உண்டேம், தாரினெம், உண்ணுநின்றேம், உண்பேம், தாரி னேம், உண்டோம், உண்ணு நின்ருேம், உண்போம், தாரினுேம் யானும் அவனும் எனவும், உண்கும், உண்டும், வந்தும், வருதும், சென்றும் சேறும் யானும் அவனும் நீயும் எனவும், முன்னிலே யாரையும் படர்க்கையாரையும் இருபாலாரையும் முறையே உளப்படுத்தி வந்தமை காண்க. இச்சூத்திரத்தில் முன்னிலேயாரையும் படர்க்கையாரையும், என்னும் எண்ணும்மைகளையும், இருபாலாரையும் எ ன் னும் முற்றும்மையினையும் இறந்தது த்ரீஇய எச்சவும்மை களாகக் கொண்டு இவ்விகுதிகள் யாவும் தன்னிலையில் நின்று தனித்தன்மைப் பன்மையினே யுணர்த்துமென வுரைப்பர் சிவ ஞானமுனிவர். (உ-ம்) உண்டனம், உண்டாம், உண்டனெம் , உண்டேம் , உண்டோம், தாரினேம்-யாம் எனவரும்,