பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 இன் என்னுங் குற்ருெற்றும் ஐம்பால் மூவிடத்தும் இறந்த காலத்தையுணர்த்தும் வினையிடை நிலைகளாம்?? என்பது இதன் பொருளாகும். 'இனி, அவை (அம், ஆம்; எம், ஏம் என்பன) நிகழ் காலம் பற்றிவருங்கால் நில், கின்று என்பனவற்ருேடு வரும். நில் என்பது லகாரம் ன காரமாய் றகாரம் பெற்று நிற்கும். (உ-ம்) உண்ணுநின்றனம், உண்கின்றனம்; உண்ணு நின்ரும், உண்கின்ரும்; உண்ணு நின்றனெம், உண்கின்றனெம்; உண்ணு நின்றேம், உண்கின்றேம்; உண்ணு நின்றனேம், உண்கின்றனேம் . ஈண்டு அன் (சாரியை) பெற்ற விகற்பம் இறந்தகாலத்திற் கூறியவாறே கொள்க: என நிகழ்கால முணர்த்தும் எழுத்துக்களே உதாரணங்காட்டி விளக்குவர் சேனவரையர். அவர் காட்டிய எடுத்துக்காட்டுக்களில் நிகழ் காலமுணர்த்தும் நில்’ என்பது நின்ற் என நில்லாது முதற் கண் ஆகாரமும் ஈற்றின் கண் உகரமும் பெற்று ஆ நின்று? என நிற்றலேயும் கின்று என்பதில் இடைநின்ற னகரவொற்றுக் கெட்டுக் கிறு’ என நின்று உண்கிருன் என வழங்குதலேயும் கண்ட பவணந்தியார், 142. ஆநின்று கின்று கிறு மூவிடத்தின் ஐம்பா னிகழ்பொழு தறை வினே யிடை நிலே. எனச் சூத்திரஞ் செய்தார் . ஆநின்று, கின்று, கிறு என்பன ஐம்பால் மூவிடத்தும் நிகழ்காலத்தையுணர்த்தும் வினேயிடை நிலேகளாம்?? என்பது இதன் பொருள். 'உண்ணு கிடந்தனம், உண்ணுவிருந்தனம் எனக் கிட இரு என்பனவும் சிறுபான்மை நிகழ்காலத்து வரும்?? என்பர் சேவைரையர். உண் என்னும் பகுதியை நோக்கும்வழி ஆகிட, ஆவிரு என்பனவே காலமுணர்த்தும் இடைநிலையெனக் கொள்ளவேண்டியுளது. இவற்றைப் பவணந்தியார் நிகழ்கால இடைநிலைகளாக எடுத்தாளாமை நினைத்தற்குரியதாகும். 'அவை (அம், ஆம், எம், ஏம் என்பன) எதிர்காலம் பற்றி வருங்காற் பகரமும் வகரமும் பெற்றுவரும் வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் (ஆகிய சாரியைகள்) அடுத்து நிற்கும்.