பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 (உ-ம்) உரைப்பம், செல்வம்; உண்குவம், உரிதுவம் எனவரும். ஒழிந்தவிற்ருெடும் ஒட்டிக்கொள்க. பாடுகம், செல்கம் என ஏற்புழிச் சிறுபான்மை ககரவொற்றுப் பெறுதலும் கொள்க’ என எதிர்கால முணர்த்தும் எழுத்துக்களே உதாரணங் காட்டி விளக்குவர் சேவைரையர். அவர் கருத்துப்படி பகரமும் வகரமும் ககரமும் எதிர்காலம் உணர்த்தும் வினேயிடைநிலைக ளாயினும் அவற்றுட் பகரமும் வகரமுமே எதிர்கால இடைநிலே களெனத் தெளிவாகக் கொள்ளத்தக்கன. 143. பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினே யிடைநிலை யாமிவை சிலவில. எனச் சூத்திரஞ்செய்தார் நன்னூலார்.

பகரவொற்றும் வகரவொற்றும் ஐம்பால் மூவிடத்தும் எதிர்காலத்தைத்தரும் வினையிடை நிலைகளாம். இங்குக் கூறிய முக்கால இடைநிலைகள் சில முற்று வினே எச்சவினைகட்கு இலவாம்' என்பது இதன்பொருள் .

இனி, இவை சில இல. எனவே, காலத்தை இறுதிநிலை தருமென்பது உம், முதனிலே தருமென்பது உம் பிறவிடைநிலை தருமென்பது உம் பெற்ரும். இவ்விகற்பமெல்லாம் (றேவ்வொ டுகரவும்மை? என) வருஞ் சூத்திரத்தாற் கூறுப?? என்பர் சிவஞானமுனிவர். 'உம்மொடு வரூஉங் கடதற-உண்கும், உண்டும், வருதும், சேறும் எனவும், உரிதுதும், திருமுதும் என ஏற்றவழி உகரம் (சாரியை) பெற்றும் வரும். இவை எதிர்காலம் பற்றிவரும்: என்பர் இளம்பூரணர். கும்.மீறு வினைகொண்டு முடிதலின் ஒழிந்த உம்மீற்றின் வேறெனவேபடும். ட, த, ற என்பன எதிர்காலத்திற்குரிய எழுத்து அன்மையாற் பாலுணர்த்தும் இடைச்சொற்கு (உம் என்னும் விகுதிக்கு) உறுப்பாய் வந்தன. எனவேபடும். படவே அவற்றை உறுப்பாக உடைய ஈறு மூன்ரும். அதனுன் உம் என ஒர் ஈருக அடக்கலாகாமையின் அந்நாற்கிளவியொடு என்ருர்’ எனக் கும் டும் தும் றும் என்னும் காலங்காட்டும்