பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெயர்ச்சொல்லும், இவையெனத் தம் பொருளே வேறறிய நிற்கும் ஈற்றெழுத்தினத் தமக்குடையவல்ல; உயர்திணையிடத்திற் குரிய பாலாய் வேறுபட்டிசைப்பன. எ-று. பால் வேறுபட்டிசைத்தலாவது, தாம் உயர்திணைப் பெயராய் ஆடுஉவறிசொல் முதலாயின வற்றுக்குரிய ஈற்றெழுத்தே தம் வினேக்கு ஈருக இசைத்தல். ஆடவர் மகளிர் என்னும் இருதிறத்தாருள் தத்தகக்கு இயல்பாக அமைய வேண்டிய தன்மையில் மாறுபட்டுப் பெண் தன்மை மிக்கு ஆண்தன்மை குறைந்தாரைப் பேடி எனவும், ஆணுமின்றிப் பெண்ணுமின்றி இருதன்மையும் விரவிய நிலேயி லுள்ளாரை அலி எனவும் வழங்குதல் தொன்றுதொட்டு வரும் தமிழ் மரபு. . அவற்றுள் உயர்திணை மருங்கிற் பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர் நிலேக் கிளவி என்றது பேடியை பெண்மை சுட்டிய என்னும் பெயரெச்சம் பெயர் நிலேக் கிளவி என்னும் பெயர் கொண்டது. ஆண்மை திரிந்த என்பது பெயர் திலேக்கிளவிக்கு அடைமொழியாய் இடை நின்றது. ஆண்மையும் பெண் மையும் அல்லாத அலியினைத் தன்மை திரிபெயர்: எனப் (தொல்-சொல்-கிளவி-56) பின்னர்க் குறிப்பிடுவர். அலிப்பெயரின் நீக்குதற்குப் பெண்மை சுட்டிய என்றும், மக டூஉப் பெயரின் நீக்குதற்கு ஆண்மை திரிந்த என்றும் கூறினர் . பெண்மை சுட்டிய எனவே பெண்மை சுட்டாத நிலேயிற் பேடு ன்னும் சொல்லே வழங்குதல் தொல்காப்பியர் காலத்து இலக்கண மரபன்று என்பது பெறப்படும். பெண்ண்ம் திரிதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மையாகலான் ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவியை நீங்கு எடுத்தோ தினர். பெண்மை திரிந்ததனே மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி (தொல்-பெய சியல்- 194) எனப் பின்னர் எடுத்தோதுவர். . பேடியர், பேடிமார், பேடிகள் என்பனவும் அடங்கு தற்குப் பேடியென்னும் பெயர்நிலைக் கிளவி என விதந்து கூருது, பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி? எனப் பொதுப்படக் கூறினர். பெண்ணவாய் ஆணிழந்த :படி யணியாளோ, கண்ணவாத்தக்க கலம் எனவரும் பழம் பாடலால் பெண் தன்மை மேற்பட்டு ஆண் தன்மை குறைந்த