பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 விகுதிகளைப்பற்றி விளக்கந்தருவர் சேனவரையர். இவ்வாறே கடதற என்னும் நான்கு மெய்யை யூர்ந்து வரும் உகரத்தை யீருகவுடைய கு டு து று என்னும் குற்றுகரம் நான்கும் அல் என்பதும் எதிர்காலம் பற்றிவரும் என்ருர் சேவைரையர். காலங்காட்டுவனவாக உரையாசிரியர்கள் குறித்த கும், டும், தும், றும், கு, டு, து, று என்னும் விகுதிகளோடு, மின், ஏவல், வியங்கோள், இ, மார், ப, உம் என்னும் விகுதிகளேயும் எதிர்மறை ஆகார விகுதியையும் சேர்த்துக் காலங்காட்டும் விகுதிகளாக, 144. றவ்வொ டுகர வும் மை நிகழ் பல்லவும் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னே வல் வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும் எதிர்மறை மும்மையும் ஏற்கு மீங்கே. என வரும் சூத்திரத்தில் எடுத்தோதினர் பவணந்தியார். றகரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும் ஆகிய று, றும் என்பன இறந்தகாலமும் எதிர்காலமும், தகரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும்ஆகிய டு, டும் என்பன இறந்த காலமும் எதிர்காலமும், ககரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும் ஆகிய கு, கும் எனபன எதிர்காலமும், மின் ஈறும் ஏ&ன ஏவலின்வரும் எல்லாவீறும் வியங் கோளிருகிய க, இய, இயர் என்பனவும், இகர வீறும் மாரீறும் எதிர்காலமும், பகரவீறு இறந்தகாலமும் எதிர்காலமும், செய்யும் என்னும் வாய்ப்பாட்டு முற்றிறு நிகழ்காலமும் எதிர்காலமும், முற்றுவிகுதி எச்சவிகுதி களோடு புணர்தற்குரிய எதிர்மறை ஆகாரவீறு மூன்றுகாலமும் ஏற்கும்; மேலேச்சூத்திரத்து இவை சிலவில் என்றவற்றுள்: என்பது இதன் பொருளாகும். (உ.ம்) சென்று, சென்றும்; சேறு, சேறும் எனவும், வந்து, வந்தும்; வருது, வருதும் எனவும், உண்டு, உண்டும், உண்கு, உண்கும்; உண்மின்; உண்ணுய்; உண்க, வாழிய;