பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 (இ-ள்) யார் என்னும் வினப்பொருளே யுணர்த்துஞ்சொல் உயர்திணேமருங்கின் மூன்றுபாற்கும் உரித்து. (உ-ம்) அவன் யார், அவள் யார், அவர் யார் என வரும். இது வினைக்குறிப்பாயினும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும் ரகர ஈற்ருல் மூன்று பாலேயும் உணர்த்தும் வேறுபாடுடைமையின் மார் முதலிய ஈறுகளோடு வையாது வேறு கூறினர். இச்சூத்திரப் பொருளே விளக்குவது, 848. யாரென் வினவினேக் குறிப்புயர் முப்பால். என வரும் நன்னூற் சூத்திரமாகும். விளுப் பொருண்மையின் வரும் யார் என்னும் வினைக் குறிப்புச்சொல் உயர்திணை மூன்றுபாற்கும் பொது வினையாம்?) என்பது இதன் பொருள்.

  • வண்டுதான் யார்? என அஃறிணைக்கண் வருதல் வழு வமைதியெனப்படும்.

உளம்க. பாலறி மரபின் அம்மூ வீற்றும் ஆவோ வாகுஞ் செய்யு ளுள்ளே. இஃது, உயர்திணைப் பாற்குப் படுவதோர் செய்யுள் முடிபு கூறுகின்றது. (இ-ள்) மேல் உணர்த்திப் போந்த உயர்திணைக்கண் பால் விளங்கவரும் இயல்புடைய ஆன், ஆள், ஆர் என்னும் அம் மூன்றீற்றின் கண்ணும் உள்ள ஆகாரம் செய்யுளுள் ஓகார மாகத்திரியும். எ-று. (உ-ம்) வினவி நிற்றந்தான் என்பது வினவி நிற்றந் தோன். (அகம்-48) எனவும், நகூஉப் பெயர்ந்தாள் என்பது நக உப் பெயர்ந்தோள்? (அகம்-248) எனவும், சென்ரு ரன்பிலர் என்பது, சென்ருே ரன்பிலர்: (அகம்-31) எனவும் செய்யுளுள் ஆகாரம் ஒகாரமாய்த் திரிந்தவாறு காண்க.