பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வந்தோம், சென்ருேம் எனவழக்கினுள் வருவன ஏமீற்றின் சிதைவென்பர் சேவைரையர், உளயிஉ. ஆயென் கிளவியு மவற்ருெடு கொள்ளும். இது, விரவுவினைச்சொல்லீறு செய்யுளுள் திரியுமாறு கூறு கின்றது. . (இ-ள்) முன்னிலையீற்றுள் ஆய் என்னும் ஈறும் மேற் கூறப்பட்டனபோலச் செய்யுளுள் ஆகாரம் ஒகாரமாய்த் திரியும். எ-று. (உ-ம்) வந்தாய் மன்ற தண்கடற் சேர்ப்ப என்பது வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப: (அகம்-80) எனச் செய்யுளுள் ஆகாரம் ஒகாரமாய்த் திரிந்து வந்தது. 'கூறப்பட்ட நான்கீற்றுத் தொழிற்பெயரும் ஆகாரம் ஒகார மாதல் பெயரியலுட் கொள்ளப்படும்? என்பர் சேனவரையர். இவ்வாறு ன, ள, ர, ய என நான்கீற்று வினைச்சொற் களும் பெயர்களும் செய்யுளுள் ஆகாரம் ஒகாரமாய்த் திரிந்து வரவும்பெறும் என்னும் இவ்விதிகளைத் தொகுத்துரைக்கும் முறையிலமைந்தது, 352. பெயர் வினே யிடத்து ன ளரய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளு ளுரித்தே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் னகார, ளகார, ரகார, யகார வீறுகளின் அயல்நின்ற விகுதிமுதல் ஆகாரம் ஒகார மாதலும் செய்யுளிடத்து உரியதாகும்?' என்பது இதன் பொருள் . உம்மையை எதிர்மறை யும்மையாகக் கொண்டு, வில்லான், வில்லோன் என ஒகாரமாகத் திரிதலும் திரியாமையும், செக் கான், வண்ணுன் எனத் திரியாதியல்பாதலும், ஆக்கவும்மை யாகக் கொண்டு பழமுதிர்சோலை மலைகிழவோன் என விகுதி அகரம் ஆகாரமாக நீண்டு ஒகாரமாதலும் கொள்வர் சிவஞான முனிவர்.