பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 (உ-ம்) அல்லன், அல்லள், அல்லர் எனவும், இலன், இலள், இலர் எனவும், உளன், உளள், உளர் எனவும், வல்லன், வல்லள், வல்லர் எனவும் வரும். இவை ஒருவாய்பாடேபற்றிப் பிறத்தலின் வேறு கூறினுர். அன்ன பிறவும் என்ற தல்ை, நல்லன், நல்லள், நல்லர்; தீயன், தீயள், தீயர்; உடையன், உடையள், உடையர் என்னும் தொடக்கத்தனவும் கொள்க. வினேக்குறிப்புச் சொற்கள் ஒப்புணர்த்தியும் பண்புணர்த் தியும் குறிப்புணர்த்தியும் உடைமைக்கு மாறயும் வருவன. ஒப்பாவது வினை பயன் மெய் உரு என்பனவற்ருல் ஒன்றன யொன்று ஒத்தல். பண்பாவது ஒரு பொருள் தோன்றுங் காலத்து உடன்தோன்றி அது கெடுமளவும் நிற்பது உண்மை யாவது ஒரு பொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தோறும் நிற்பது. குறிப்பாவது பொருட்குப் பின் தோன்றிச் சிறிது பொழுது நிகழ்வது. வினைக்குறிப்பு இன்ன பொருள்பற்றி வரும் என இவ்விரு சூத்திரங்களாலும் ஆசிரியர் தொல்காப்பியர் கூறியதனே யுளங் கொண்ட பவணந்தியார், 320. பொருண்முத லாறினுந் தோற்றிமுன் குறனுள் வினேமுதல் மாத்திரை விளக்கல் வினேக்குறிப்பே. எனவரும் சூத்திரத்தால் குறிப்புவினைச் சொல்லினது பொது விலக்கணம் உணர்த்தினர். பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயரும் முதனிலேயாக அவற்றின்கண் தோன்றி, மேல் கருத்தா முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைப் பொருள்களுள், கருத்தா ஒன்றையுமே விளக்குதல் வினைக் குறிப்புச் சொல்லினது இலக்கணமாம்?’ என்பது இதன் பொருள். (உ-ம்) குழையினன், அகத்தினன், ஆதிரையான், குறுந் தாளன், கரியன், கடுநடையன் எனவரும்,