பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நிகழ்காலத்தின்கண் நில், கின்று என்பனவற்ருேடு அன் (சாரியை) பெற்றும் பெருதும் வரும். எதிர்காலத்தின்கண் பகர வகரத்தோடு அன் (சாரியை) பெற்றும் பெருதும் வரும்?? என்பர் சேவைரையர். இங்குக் கூறப்பட்ட கால வெழுத்துப் பற்றிய விளக்கமும் அவை பற்றிய நன்னூலார் விளக்கமும் முன்னர்க் கூறப்பட்டன. (உ-ம்) தொக்கன, தொக்க; உண்டன, உண்ட; வந்தன, வந்த; சென்றன, சென்ற எ-ம், அஞ்சின எ-ம், போயின, போயன, போய எ-ம், உண்ணு நின்றன, உண்ணுநின்ற: உண்கின்றன, உண்கின்ற எ-ம், உண்பன, உண்ப; வருவன, வருவ. எ-ம், வரும் உரிதுவன உரிதுவ என உகரத்தோடு ஏனையெழுத்துப் பேறும் ஏற்றவழிக் கொள்க. வருவ, செல்வ என்னுந் தொடக்கத்தன அகரவீருதலும் வகரவீருதலும் உடைய ஆகாரம் காலவெழுத்துப் பெருது, உண்ணு, தின்ன எனவரும். வகரம், உண்குவ, தின்குவ என எதிர்காலத்திற் குரித்தாய்க் குகரச்சாரியை பெற்றும், ஒடுவ, பாடுவ எனக் குகரம் பெருதும் வரும். உரிதுவ, திருமுவ என உகரச் சாரியை பெறுதலும் ஏற்றவழிக் கொள்க. ஒழிந்த எழுத்தோடும் இவ்வாறே ஒட்டுக. இச்சூத்திரத்தினை அடி யொற்றியமைந்தது, 828. அஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே எதிர்மறைக் கண்ண தாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'அஆ என்னும் இவ்விரு விகுதியினையும் இறுதியாகவுடைய மொழிகள் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாகும். இவற்றுள் ஆகாரம் எதிர்மறை வினைக் கண் வரும்; (உடம்பாட்டு வினைக்கண் வாராது): என்பது இதன் பொருளாகும். ஆசிரியர் தொல்காப்பியனர் அஃறிணைப் பலவின்பாற் குரியனவாகக் கூறிய அ, ஆ, வ என்னும் மூன்றீறுகளுள் வகரவீற்றினை அகரவீற்றுள் அடக்கினர் நன்னூலார். வவ்வீறு