பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 ஒன்றென முடித்தலான் நன்று, தீது, நல்ல, தீய என்பனவுங் கொள்க என்பர் நச்சிர்ைக்கினியர். உளஉக. பன்மையு மொருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வருஉங் காலக் கிளவி யஃறிணை மருங்கின் மேலேக் கிளவியொடு வேறுபா டிலவே இஃது அவ் வினைக்குறிப்பிற்கு ஈருமாறு கூறுகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த அத்தன்மைத்தாகிய இலக்கணமுடைய வினேக்குறிப்புச் சொற்கள், அஃறிணையிடத்து மேற்கூறிய தெரிநிலை வினையின் ஈறுகளோடு ஈறு வேறுபாடு இல. எ-று. வேறுபாடில என்றது, அஃறிணையிடத்துத் தெரிநிலே வினைக்கோதிய ஈற்றுட் பொருந்துவன வினைக்குறிப்பின் கண்ணும் வருங்கால் அவ்வவ்வீற்ருல் இடமும் பாலும் உணர்த்துதலில் வேறுபாடில எனத் தெளிவித்தவாரும். அகரவீறும், து, று என்னும் ஈறுகளும் அவ்வீறு பற்றிப் பாலும் இடமும் உணர்த்துதல் முற்காட்டியவற்றுட் காண்க. ஆகாரவீறு இம்மணி பொல்லா? என எதிர்மறைக்கண் வந்தது. கதவ’ (கதத்தினையுடைய) என வகரவீறு பன்மைப் பாலுணர்த்தியது. உ.உ.உ முன்னிலே வியங்கோள் வினே யெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் பிரிபு வேறுபடுஉஞ் செய்திய வாகி, இருதினைச் சொற்கும் ஒரன்ன வுரிமைய. இஃது இருதிணைக்கும் உரிய வினைச் சொற்களின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது.