பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認58 (இ-ள்) முன்னிலே முதலாகச் செய்த என்பது ஈருகக் கூறிய முறையால் நின்ற எண்வகைச் சொல்லும், (பொதுமை யிற்) பிரிந்து (ஒருகால் உயர்திணையுணர்த்தியும் ஒருகால் அஃ றிணேயுணர்த்தியும்) வேறுபடுந் தொழிலேயுடையவாய், இரு திணைச் சொல்லாதற்கும் ஒத்த வுரிமையுடையன. எ-று. முன்னிலே வினைச்சொல்லாவது முன்னின்ருன் தொழி லுணர்த்துவது. வியங்கோள் என்பது ஏவற்பொருளதாய் வருவது. வியம் - ஏவல். வியங்கோள் - ஏவற்பொருளைக் கொண்ட வினேச்சொல். வாழ்த்துதல் முதலிய பிற பொருளு முளவேனும் மிகுதிபற்றி வியங்கோள் எனப் பெயர்பெற்றது. வினேயெஞ்சுகிளவி என்பது, வினைச்சொல்லே எச்சமாகவுடைய வினேச்சொல். இன்மை செப்பல், இல்லே இல் என வரும் வினைச் சொற்கள். வேறு என்கிளவி-வேறு என்னும் சொல். செய்ம்மன என்பது மனவீற்று முற்ருய் எதிர்கால முணர்த்தும் வினைச் சொற்களைக் குறிக்கும் வாய்பாடு. செய்யும் என்பது, முற்றும் எச்சமும் ஆகிய இருநிலைமையு முடைத்தாய் உம்மீற்றன் நிகழ்கால முணர்த்தும் வினைச்சொல் வாய்பாடு. செய்த என்பது அகரவீற்றுப் பெயரெச்சமாய் இறந்தகால முணர்த்தும் வினைச் சொல் வாய்பாடு, செய்ம்மன, செய்யும், செய்த என்னும் இம் மூன்று வாய்பாட்டானும், அவ்வீறுகளையுடையனவாய்க் கால முணர்த்தும் உண்மன, உண்னும், உண்ட என்னும் தொடக் கத்தன எல்லாம் தழுவப்பட்டன. எல்லாத் தொழிலும் செய்தல் வகையா யடங்குமாதலின் செய் என்னும் பொதுவாய்பாடு எல்லாத் தொழில்களேயும் அகப்படுத்து நிற்கும்.எனவே செய் என்னும் பொதுவாய்பாட்டால் நட வா முதலிய எல்லாவீற்று வினைப்பகுதிகளும் தழுவப்படுவனவாயின. இருதினேப் பொதுவினைகளாகத் தொல்காப்பியனர் கூறிய இவற்றுடன் தன்மை வினைச்சொல்லேயும் உள என்னும் அஃறிணைப் பன்மையினேடொத்த ஒருமை வினையாகிய உண்டு என்பதனையும் சேர்த்து, 329. தன்மை முன்னிலே வியங்கோள் வேறிலே உண்டீ ரெச்ச மிருதினைப் பொதுவின. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.