பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 தேய் பார் செல் வவ் வாழ்கேள் அஃகு என்று எய்திய விருபான் மூன்ரு மீற்றவும் செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. எனவரும் நன்னூற் சூத்திரத்தால் நன்கு புலனுதல் காண லாம். இவ்விரு சூத்திரங்களையும் ஒருங்கு வைத்துணருங்கால் நட, வா, உண், தின் என்றற்ருெடக்கத்து முதனிலேகளே ஆய் முதலிய விகுதியோடு புணராது தனித்து நின்று ஒசை வேறுபாட்டால் முன்னிலே யேவலொருமை யெதிர்கால வினே முற்றுப் பொருண்மையுணர்த்துவன என்பது பவணந்தியார் கொள்கையாதல் நன்கு விளங்கும். இம்மூன்று விகுதியீற் றனவான முற்றும், ஏவலின் வரும் இருபத்து மூன்றீற்றவான மொழிகளும் ஒருமை முப்பாலேயும் உணர்த்தும் முன்னிலே வினைக்குறிப்பு முற்றுக்களாம்? எனவரும் மயிலநாதர் @_6○厚 யினுல் நன்னூலார் கொள்கை தெற்றெனப் புலனதல் காணலாம். உஉச. இர் ஈர் மின் என வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ரனேய வென் மனுர் புலவர். இது, முன்னிலைப் பன்மை வினேச்சொல் இவையென்று உணர்த்துகின்றது. (இ-ள்) இர், ஈர், மின் என்னும் ஈற்றையுடைய மூன்று சொல்லும் பல்லோர்கண்ணும் பலவற்றின்கண்ணும் சொல் லுதற்கண் ஒத்தவுரிமைய என்ப்ர் ஆசிரியர். எ-று. 'இர் ஈறு அர் ஈற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், ஈர் ஈறு ஆர் ஈற்றிற்குரிய எழுத்துப் பெற்றும் மூன்றுகாலமும் பற்றி வரும். மின் ஈறு பிறவெழுத்துப் பெருது ஏற்றவழி உகரம் (சாரியை) பெற்று எதிர்காலம் பற்றிவரும் என்பர் சேை வரையர். (உ-ம்) உண்டனிர், உண்ணு நின்றனிர், உண்குவிர் எ-ம். உண்டீர், உண்ணு நின்றீர், உண்குவீர் எ-ம். உண்மின், தின்மின், உரிதுமின் எ-ம். வரும்.