பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 (இ-கள்) செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய் யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என ஈற்ருல் வகைப் படுத்தப்பட்ட அவ் ஒன்பது வாய்பாடுகளும் வினே யெச்சச் சொல்லாம். எ-று. அவ்வகை ஒன்பதும் என்றது, உ, ஊ, பு, என, இயர், இய, இன், அ, கு என இறுதிநின்ற இடைச்சொல்லால் வேறு பட்ட ஒன்பது வாய்பாடுகளும் என்றவாறு . வினேயெச்சமாவது வினையை ஒழிபாகவுடைய சொல்; அது மற்ருெரு வினைச் சொல்லோடல்லது முற்றுப்பெருது நிற்கும் வினைச்சொல்லாதலிற் பாலுணர்த்தாது காலங்காட்டி நிற்கும். செய்து என்னும் வாய்பாட்டில் வினையெச்ச விகுதியாகிய உகரம், நக்கு, உண்டு, வந்து, சென்று எனக் கடதற ஊர்ந்து இயல்பாயும், எஞ்சி, உரிஞ, ஒடி என ஏனேயெழுத்துார்ந்து இகரமாய்த் திரிந்தும், ஆய், போய் என நெடிலிற்று முதனில் முன்னர் யகரம் வரத் தான்கெட்டும் இறந்த காலம் பற்றி வரும். உகரம் ஒன்ருய்நின்று கடதறஆர்ந்து உடன்பாட்டு வினைக்கண் பயின்று வருதலானும், எதிர்மறை யெச்சமெல்லாம் பெரும் பான்மையும் உகரவீருயல்லது வாராமையானும் உகரவிறே இயல்பெனவும் இகரமும் யகரமும் அதன் திரிபெனவும் விளக்குவர் சேன வரையர். செய்யூ எனனும் வாய்பாட்டில் ஊகாரம், உண்ணுஉ வந்தான், தின்னுாஉவந்தான் எனப் பின்வருந் தொழிற்கு இடை யின்றி, முன்வருந் தொழில்மேல் இறந்தகாலம் பற்றி வரும். செய்யாவென்னும் வினையெஞ்சு கிளவியும் என எழுத் ததிகாரத்திற் கூறப்படும் செய்யா! என்னும் ஆகாரவிற்று வினையெச்சமும் செய்யூ என்னும் இவ்வாய்பாட்டில் அடங்கும். அது, உண்ணுவந்தான் என இறந்தகாலம் பற்றி வரும். "செய்பு’ என்னும் வாய்பாட்டில் பகரவுகரம் ‘நகுபு வந்தான் என நிகழ்காலம் பற்றி வரும். நகுபு வந்தான் - நகா நின்று வந்தான் என்பது பொருள்