பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ஆண் போலத் திரிவது உம் என அலி மூவகைப்படும், என்பர் தெய்வச்சிலேயார். அச்சத்தின் ஆண்மையிற் றிரிந்தாரைப் பேடி எனப் பெண்ணியல்பு மிக்காராக இழித்துக் கூறும் வழக்கும் ஈண்டுக் கருதற் குரியதாகும். டு. னஃகானுெற்றே யாடுஉ வறிசொல். இஃது ஆடுஉ வறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) னகர வொற்றினை யிருகவுடைய சொல் ஆண் மகனே யறியுஞ் சொல்லாம். எ-று. ஆடுஉ-ஆண்மகன். ஆண்பால் உணர்த்தும் அன் ஆன் என்னும் இருவிகுதிகளையும் தொகுத்து னஃகானுெற்று என்ருர் . (உ-ம்) உண்டனன், உண்டான், உண்ணுநின்றனன், உண்ணு நின்ருன், உண்பன், உண்பான் எனவும் கரியன், கரியான் எனவும் வரும். இங்கெடுத்துக் காட்டிய சொற்களில் இறுதிக் கண்ணதாகிய னகர மொழிந்த பிறவெழுத்துக்கள் ஏனைப்பாற்கும் வருதலின் பாலுணர்த்து தற்கண் னகரத்தின் சிறப்பு நோக்கி னஃகா ைெற்றே என்ருர், ஏகாரம் அசைநிலே. ாைஃகானுெற்று ஆடுவறி சொல்? என்ருராயினும் ஆடு உவறி சொல்லாவது னஃகானெற்று என்பது கருத்தாகக் கொள்க. எஃகானெற்று முதலாகப் பின்னர்க் கூறப்பட்டன. வற்றிற்கும் இவையொக்கும். இச்சூத்திரத்தை அடியொற்றியமைந்தது, 324: அன்னு னிறுமொழி யாண்பாற் படர்க்கை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். சு. ள ஃகானுெற்றே மகடூஉ வறிசொல். இது, மகடூஉ வறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ள ஃகானுகிய ஒற்றினே யிருக வுடைய சொல் பெண்மகளேயறியும் சொல்லாம். எ-று.