பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 செய்தென என்னும் வாய்பாட்டில், எனவென்பது கடதற ஆர்ந்து, முடிக்குஞ் சொல்லால் உணர்த்தப்படுந் தொழிற்குத் தான் காரணம் என்பதுபட இறந்தகாலம் பற்றி வரும். (உ-ம்) சோலே புக்கென வெப்பம் நீங்கிற்று; உண்டெனப் பசி கெட்டது; உரைத்தென உணர்ந்தான்; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று எனவரும். செய்யியர், செய்யிய2 என்னும் வாய்பாடுகளில் இயர், இய என்பன உண்ணியர் வந்தான், உண்ணிய வந்தான் என எதிர்காலம் பற்றி வரும். போகியர், போகிய என இவ் விகுதிகள் சிலவிடங்களில் ககரம் (சாரியை) பெற்று வருதலும் கொள்ளப்படும். செயின் என்னும் வாய்பாட்டில் இன் என்பது மழை பெய்யிற் குள நிறையும் என எதிர்கா லம் பற்றிக் காரணப் பொருட்டாய் வரும். நடப்பின் உரைப்பின் என ஏற்ற வழிப் பகரம் பெற்றுவருதலும் கொள்க. செய? என்னும் வாய்பாட்டில் அகரம், மழை பெய்யக் குளம் நிறைந்தது. என இறந்த காலமும், ஞாயிறு பட வந் தான் என நிகழ்காலமும், உண்ண வந்தான்? என எதிர் காலமும் ஆகிய மூன்று காலமும் பற்றி வரும். உரைப்ப, உரைக்க என ஏற்றவழிப் பகரமும் ககரமும் பெறுதல் கொள்க. செயற்கு என்னும் வாய்பாட்டில் குகரம், உணற்கு வந்தா ன்’ என எதிர்காலம் பற்றி வரும். செயற்கு என்னும் இவ்வினேயெச்சம் செயல் + கு = செயற்கு என உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடைத்தாயினும் பெயரும் உருபும் பகுப்பப் பிளவுபட்டிசைத்தல் போன்று பிளவுபடாது ஒன்றுபட்டிசைத்தலால் உருபேற்ற தொழிற்பெயரின் வேறெனவே கொள்ளப்படும். செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய என்னும் வினையெச்ச வாய்பாடுகள் ஐந்தும் இக்காலத்து வழக்கினுள் வாராவாயினும் சான்ருேர் செய்யுளுள் அவற்றது வேற்றுமை யெல்லாம் கண்டுணர்ந்து கொள்ளலாம்.