பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 உஉகூ. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியு மவற்றியல் பினவே. இதுவும் ஒருசார் வினையெச்ச வாய்பாடு உணர்த்துகின்றது. (இ-ள்) பின், முன், கால், கடை, வழி, இடத்து என்னும் ஈற்றினையுடையவாய் வருவனவும், அவைபோலக் கால முணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைச் சொற்களாம். 6T-g] . (உ-ம்) நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார்? என இறந்தகாலம் பற்றியும், நீ இவ்வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ ? என எதிர்காலம் பற்றியும் பின்னிறு வரும். 'மருந்து தின்னமுன் நோய் தீர்ந்தது’ என முன்னிறு இறந்த காலம் பற்றிவரும். காலிறு விடுத்தக்கால்? என இறந்த காலமும், நாடுங்கால்’ என நிகழ்காலமும் எதிர்காலமும் ஆகிய மூன்றுகாலமும் பற்றிவரும். துரவாமை வந்தக்கடை? எனக் கடையீறு இறந்தகாலம் பற்றிவரும். உரைத்தவழி: 'உரைத்தவிடத்து என இறந்தகாலமும், உரைக்கும்வழி? உரைக்குமிடத்து? என நிகழ்காலமும் எதிர்காலமுமாகிய மூன்றுகாலமும் பற்றி வழியீறும் இடத்தீறும் வரும். இங்குக் கூறப்பட்ட பின் முன் முதலாயின காலங் கண் ணிய வினைச் சொல்லீறுகளாய்ப் பிளவுபடாது ஒன்று பட்டி சைத்த வழியே இவை வினையெச்ச வாய்பாடுகளாகக் கொள் ளப்படும். கூதிர் போய பின் வந்தான், எனவும் நின்ற விடத்து நின்ருன் எனவும் இவை பிளவுபட்டிசைத்த வழிப் பெயரெச்சத் தொடர்களாகக் கொள்ளப்படும். அன்ன மரபிற் காலங்கண்ணிய என்ன கிளவியும்? என்ற தல்ை உண் பாக்கு, வேபாக்கு எனவரும் பாக்கீறும், உண்பான், வருவான் எனவரும் ஆனிறும், நடக்கலும் எனவரும் உம் மீறும் அற்ருல் எனவரும் ஆலீறும், அவாவுண்டேல் என வரும் ஏலீறும், 'கூருமல்? எனவரும் மல்லீறும், கூருமை: எனவரும் மையிறும் வினையெச்ச விகுதிகளாகக் கொள்ளப்படும்.