பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 என்ன கிளவியும்? என்ற தல்ை, அன்றி, இன்றி, அல்லது, அல்லால் எனவரும் குறிப்பு வினையெச்சமும் கொள்க என்பர் சேவைரையர். வினையெச்சமாவது இதுவென உணர்த்தப்போந்த நன்னூ லார், 341. தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினே ஒழிய நிற்பது வினேயெச் சம்மே. என்ருர் . செயலேயும் காலத்தையும் காட்டிப் பால் தோன்ருது வினையெஞ்ச நிற்பது வினையெச்சமாம். என்பது இதன் பொருள். தொல்காப்பியனர் முதற்கண்குறித்த வினை யெச்ச வாய்பாடுகள் ஒன்பதுள் செய்யூ என்பதனுள் அடங்கிய செய்யா என்பதனைத் தனி வாய்பாடாகக் கொண் டும், அவர் குறித்த செயற்கு என்னும் வாய்பாட்டினேயும் பின்முன் முதலிய பிற வாய்பாடுகளையும் இன்ன? என்பதளுல் அடக்கியும், அவர் கூருத வான், பான், பாக்கு என்பன வற்றைச் சேர்த்தும், 342. செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின வினேயெச் சம்பிற ஐந்தொன் ருறுமுக் காலமு முறை தரும். எனச்சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் எனவரும் ஒன்பது வாய்பாடு களும். வான், பான், பாக்கு என்பவற்றை ஈருகவுடைய விஜனப்பகுதிகளும் இவை போல்வன பிறவும் வினையெச்ச விஜன களாம். இவற்றுள் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய் தென என்னும் ஐந்தும் இறந்தகாலமும், செய என்னும் வாய்பாடு ஒன்றும் நிகழ்காலமும், எஞ்சிய ஆறும் எதிர்காலமும் காட்டுவனவாம்?? என்பது இதன் பொருளாகும்.