பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 (உ-ம்) கையிற்று வீழ்ந்தான், கையிறு வீழ்த்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும். ஈண்டு இறுதல் கையாகிய சினேயின் தோழில் வீழ்தல் கையினே யுடையாளுகிய முதலின் தொழிலாம். உங்உ. ஏனே யெச்சம் வினைமுத லானும் ஆன வந் தியையும் வினேநிலை யானும் தாமியன் மருங்கின் முடியு மென்ப, இஃது ஒழிந்த எச்சங்கட்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய மூன்றுமல்லாத பிறவினையெச்சங்கள் தன் கருத்தாவின் வினையாலும் அவ்விடத்து வந்து பொருந்தும் பிற கருத்தாவின் வினையாலும் வரையரையின்றித் தாம் இயலும் வகையால் முடியும் என்று கூறுவர் ஆசிரியர். எ~று. ஆன - அவ்விடத்து. ஆன் - அவ்விடம், (உ-ம்) மழை பெய்தெனப் புகழ்பெற்றது; மழை பெய் தென மரந் தளிர்த்தது எனவும், மழை பெய்யியர் எழுந்தது; மழை பெய்யியர் பலி வழங்கினர் எனவும், மழை பெய்யிய முழங்கும்; மழை பெய்யிய வானேப் போற்றுதும் எனவும், மழைபெய்யிற் புகழ்பெறும்; மழை பெய்யிற் குள நிறையும் எனவும், மழை பெய்யப் புகழ்பெற்றது; மழை பெய்ய மரந் தளிர்த்தது எனவும், மழை பெய்தற்கு முழங்கும்; மழை பெய் தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும், இறந்தபின் இளமை வாராது; கணவன் இனிது உண்டபின் காதலி முக மலர்ந்தாள் எனவும் முதனிலே மூன்றுமல்லாத ஏனைய வினையெச்சங்கள் தன் கருத்தாவின் தொழிலேயும் பிற கருத்தாவின் தொழிலேயுங் கொண்டு முடிந்தவாறு கண்டு கொள்க. ஏனையவற்ருேடும் இவ்வாறே இருவகையும் இயைத்துக் காண்க . தொல்காப்பியர் கூறிய இம்மூன்று சூத்திரப் பொருள்களேயும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தன, 343. அவற்றுள், முதலி ன்ைகும் ஈற்றின் மூன்றும் வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற.