பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 எனவே அது முடியாக்கால் ஒழிந்த எச்சங்கள் முடியா என்ப தாம். இவ்வாறே உண்டு, பருகூத் தின்குபு வந்தான் எனப் பல வாய்பாட்டு எச்சங்கள் முறையே அடுக்கி வந்து, தின்குபு என்னும் முன்னது முடிய, பின்னின்ற ஏனையவும் அதனையே முடிபாகக் கொண்டு முடிந்தமை காண்க. உண்டு வந்தான், தின்று வந்தான் எனச் சொல்தோறும் வினையியைதல் மரபு. அவ்வாறு நில்லாது தம்முள் இயைபில் லாதன அடுக்கி வந்து இறுதியில் நின்ற வினையெச்சத்திற்கு முடிபாகிய சொல்லால் ஏ&னய எச்சங்கள் எல்லாம் முடியினும் குற்றமாகாது என வழுவமைத்தவாறு. வினையெச்சம் பன்முறைய னும் அடுக்கி ஒரு சொல்லால் முடியும் எனவே, பெயரெச்சம் ஒரு முறையான் அடுக்கி ஒரு சொல்லால் முடியும் என்பதாம். நெல்லரியும் இருந்தொழுவர்? (புறம்-24) என்னும் பாட்டினுள் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சங்கள் பல அடுக்கி மிழலே என்னும் ஒருபொருள் கொண்டு முடிந்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு வினையெச்சம் பல அடுக்கிவந்து ஒரு முடிபு கொள்ளுதல் போன்று, பெயரெச்சங்களும் தெரிநிலேயும் குறிப்பு மாகிய வினைமுற்றுக்களும் வேற்றுமை யுருபுகளும் அடுக்கிவந்து ஒரு முடிபு கொள்ளுதலே அறிவுறுத்துவது, 354. உருபுபல அடுக்கினும் வினைவே றடுக்கினும் ஒருதம் மெச்ச மீறுற முடியும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'உருபு ஒன்றே அடுக்கியும் பல மயங்கி அடுக்கியும் வினேச் சொற்கள் மூன்றும் (தம்முள் விரவாது) வேறு வேற டுக்கியும் வந்தாலும், தத்தம் எச்சம் இறுதியிலே ஒன்றுவர அதனோடு அனேத்தும் முடிவனவாம்’ என்பது இதன்பொருள். 'உருபுபல அடுக்கினும் என்னும் உம்மையால் உருபு ஒன்றேயடுக்கி வருதலும், கொள்ளப்படும். (உ-ம்) சாத்தன் யானையது கோட்டை நுனிக்கட் பொருட்கு வாளாற் குறைத்தான் என வேற்றுமையுருபுகள் பல