பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 அவ்வறு பொருட்கும் ஒரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. இது, பெயரெச்சம் உணர்த்துகின்றது. (இ-ள்) செய்யும், செய்த என்னும் சொற்கள் (தொழில் முதனிலே எட்டனுள் இன்னதற்கு, இது பயனுக என்னும இரண்டும் நீங்கலாக) நிலம், பொருள், காலம், கருவி, வினைமுதல், வினே என்னும் இந்த ஆறுபொருட்கும் ஒத்த வுரிமைய. எ-று. வினைமுதற் கிளவி என்றது வினைமுதற் பொருளே. தொழில் முதனிலே எட்டனுள் ஆறு பொருட்கும் ஒத்தவுரிமைய எனவே ஒழிந்த இரண்டற்கும் இவை ஒப்பவுரியவாகா, சிறுபான்மை உரியன என்ற வாரும். (உ-ம்) வாழும் இல், கற்கும் நூல், துயிலுங் காலம், வனேயுங் கோல், ஒதும் பார்ப்பான், உண்ணும் ஊண் எனச் செய்யும் என்னும் பெயரெச்சத்து உம்மீறு கால எழுத்துப் பெருது நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்த்தி நிலன் முதலாய ஆறு பொருட்கும் உரித்தாய் வந்தது. புக்க வீடு, உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து இறுதி அகரம் க, ட, த, ற, ய, ன என்னும் எழுத்துக்களே ஊர்ந்து நிலன் முதலாய அறுபொருட்கும் உரித்தாய் வந்தது. நோய்தீரும் மருந்து, நோய் தீர்க்கும் மருந்து என்னும் ஏதுப்பொருண்மை கருவிக்கண் அடங்கும். அரசன் ஆகொடுக்கும் பார்ப்பான்; ஆ கொடுத்த பார்ப்பான் எனவும், ஆடை வெளுக்குங் கூலி; ஆடை வெளுத்த கூலி எனவும் இன்னதற்கு, இது பயனுக என்னும் இரண்டற்கும் இப்பெயரெச்சங்கள் சிறுபான்மையுரிய வாய் வந்தன. செய்த என்னும் தெரிநிலேவினேப் பெயரெச்சத் தின் குறிப்பாய் வரும் இன்ன, அன்ன, என்ன, கரிய, செய்ய என்பனவும் இங்குக் குறிப்புப் பெயரெச்சமாகக் கொள்ளப்படும். உண்டான்சாத்தன், மெழுகிற்றுத்திண்ணே என்புழி உண் டான் மெழுகிற்று என்னும் முற்றுச்சொல், முறையே விஜன முதலும் செயப்படு பொருளுமாகிய சாத்தன், திண்ணை என்னும் பொருட்கு உரியவாமாறு போல, செய்யும், செய்த என்னும்