பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இவ்விருவகைப் பெயரெச்சமும் நிலன் முதலாய அறுவகைப் பொருட்கும் உரியவாம் என இச்சூத்திரத்தால் அவற்றது அறு பொருட்குரிமையாகிய பொருண் முடிபு உணர்த்திய ஆசிரியர், பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே? (எச்சவியல்) எனவருஞ் சூத்திரத்தால் இப்பெயரெச்சங்களின் சொன்முடிபு உணர்த்துகின்ருர் என விளக்குவர் சேவைரையர். பெயரெச்சத்திலக்கணமுணர்த்தும் இச்சூத்திரப் பொருளே யுளங்கொண்ட பவணந்திமுனிவர், 339. செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு செய்வ தாதி யறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே. எனச் சூத்திர்ஞ் செய்தார். செய்த செய்கின்ற செய்யும் என்னும் வாய்பாட்டால் முக்காலமும் தொழிலும் தோன்றி (வினைமுற்றுதற்கு வேண்டும்) பால் ஒன்றும் தோன்ருது, செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செயப்படுபொருள் என்னும் அறுவகைப் பொருட் பெயரும் எஞ்ச நிற்பன, பெயரெச்சவினே வினைக்குறிப்புக் களாம்?? என்பது இதன் பொருள். பாட்டு என்றது வாய்பாட்டினே. நிற்பது என்பது தொகுதி யொருமை. செய்த என்னும் வாய்பாடு இறந்த காலத்தையும், செய்யும் என்னும் வாய்பாடு நிகழ்கால எதிர் காலங்களேயும் குறிப்பன எனக்கொண்ட தொல்காப்பியனுர், பெயரெச்சங்களே யெல்லாம் செய்யும், செய்த என்னும் இரண்டு வாய்பாடுகளில் அடக்கினர். பெயரெச்ச விகுதியாகிய அகரம் விஜனப் பிறவியென்கின்ற வேதனையி லகப்பட்டு’ (திருவாசகம்-கண்ட பத்து-2)என்றற்போன்று நிகழ்காலத்திலும் பயின்று வழங்கு தல் கண்ட பவணந்திமுனிவர், செய்கின்ற என அகர அற்று நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டினேயும் ஒன்ருகச் சேர்த்துச் செய்த, செய்கின்ற, செய்யும் எனப் பெயரெச்ச வாய்பாடுகள் மூன்றெனக் குறித்தார். இதற்கு நிகழ்காலங் கொள்ளாதார் கோளும் அறிந்து கொள்க’ எனவரும் மயிலே