பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மகடூஉ-பெண்மகள். (உ-ம்) உண்டனள், உண்டாள், உண்ணு நின்றனள், உண்ணு நின்ருள், உண்பள், உண்பாள் எனவும் கரியள், கரியாள் எனவும் வரும். இச் சூத்திரத்தை அடியொற்றி ய மைந்தது, 826. அள்ஆள் இறு மொழி பெண்பாற் படர்க்கை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எ. ரஃகா னுெற்றும் பகர விறுதியும் மாரைக் கிளவி யுளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. இது, பலரறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ரகர வொற்றினே ஈருகவுடைய சொல்லும் பகர மாகிய இறுதியையுடைய சொல்லும் மார் என்னும் இடைச் சொல்லே இறுதியாகவுடைய சொல்லும் உட்பட இம்மூன்றும் இயையத் தோன்றும் பலரையறியும் சொல்லாகும். எ-று. (உம்-) உண்டனர், உண்டார், உண்ணு நின்றனர், உண்ணுநின்றர், உண்பர், உண்பார் எனவும் கரியர் கரியார் எனவும் கூறுப, வருப எனவும் ஆர்த்தார் கொண்மார் வந்தார் என்வும் வரும். ரகாரம் மூன்று காலமும் வினைக் குறிப்பும் பற்றிப் பெருவழக்கிற்ருய் வருதலின் முன்னரும், பகரவிகுதி எதிர்காலம் பற்றி வருதலின் அதன் பின்னரும், மார் பகர விகுதியிற் சிறு வழக்கிற்ருய் வினேகொண்டு முடியும் வேறுபாடுடைமையின் அதனை அடுத்தும் உரைக்கப் பட்டவர். மூன்றும் பலரறிசொல் என்ருராயினும் பலரறி சொல்லாவது இம்மூன்றும் என்பது கருத்தாகக் கொள்க. ஆர் விகுதியாயின், உண்பார் வருவார் எனக் காலம் பற்றி வரும் எழுத்து முதனிலைக் கேற்றவாற்றன் வேறுபட்டு வரும். மார் விகுதியாயின் உண்மார், வருமார், சென்மார் என