பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 அவற்றெடு - நிலமுதலாக முற்கூறப்பட்ட அறுவகைப் பொருளொடு. செய்யுமென் கிளவி அவற்றெடு வருவழி எனவே செய்யுமென்கிளவி நிலமுதலாய அவற்றெடு வருதலும் வாரா மையுமாகிய இரு நிலேமையுமுடையதென்பது பெறப்படும். நில முதலாகிய அவற்ருெடு வரும் நிலைமை பெயரெச்சம் எனவும், வாராநிலைமை முற்று எனவும், பிறிதோர் சொல்லோடு இயை யாது தாமே தொடரா தற்கு ஏற்கும் வினைச்சொல் முற்ரும். பிறிதோர் சொற்பற்றியல்லது நிற்றலாற்ரு நிலேமை எச்சமாம்: எனவும் விளக்கம் தருவர் சேனவரையர். உங்கள். பெயரெஞ்க கிளவியும் வினே யெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலே திரியா. இஃது இருவகையெச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ஸ்) பெயரெச்சமும் வினையெச்சமும் செய்தலாகிய பொருளினவன்றி அச் செய்தற் பொருண்மையை எதிர்மறுத்துச் சொல்லினும் தம்எச்சப் பொருண்மையில் திரியா. எ-று. பொருணிலேயாவது, தம் எச்சமாகிய பெயரையும் வினையை யுங் கொண்டன்றி முடியாத நிலேமை செய்யும், செய்த எனவும், செய்து, செய்யூ, செய்பு, எனவும் முறையே பெய ரெச்சமும் வினையெச்சமும் உட்ன்பாட்டு வாய்பாட்டால் ஒதப் பட்டமையால், செய்யா என்னும் பெயரெச்ச எதிர்மறையும் செய்யாது’ என்னும் வினையெச்ச எதிர்மறையும் ஆகிய வாய்பாடுகள் ஆண்டு அடங்காமையின் அவை எச்சமாதல் பெறப்படாது; அதல்ை அவ்வெதிர்மறை வாய்பாடுகளும் தத்தம் எச்சப்பொருண்மையில் திரியாது முறையே பெயரும் வினையும் கொண்டு முடிவனவாம் என இச்சூத்திரத்தால் எய்தாதது எய்துவித்தார் ஆசிரியர். (உ-ம்) உண்ணு இல்லம், உண்ணுச் சோறு, உண்ணுக் காலம், வனையாக் கோல், ஒதாப் பார்ப்பான், உண்ணு ஊண் எனவும், உண்ணுது வந்தான், உண்ணுமைக்குப் போயினன் எனவும் வரும்,