பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 உண்ணு என்பதும், உண்தை என்பதும், உண்ணும் உண்ட என்னும் வாய்பாடுகளின் எதிர்மறையாம். உண்ணுது என்பது, உண்டு, உண்ணு, உண்குபு என்பவற்றின் எதிர்மறை. உண்ணுமைக்கு என்பது, உண்ணியர், உண்ணிய, உனற்கு என்பனவற்றிற்கும், செயற்கு என்பதுபட வரும் உண்ண என்னும் செயவெனெச்சத்திற்கும் எதிர்மறை. உண்ணுமை, உண்ணுமல் என்பனவும் அதற்கு எதிர்மறையாம். முற்றுச் சொற்களையெல்லாம் ஈறுபற்றி ஓதினராகவின், உண்டிலன், உண்ண நின்றிலன், உண்ணலன், உண்ணுன் எனவரும் எதிர்மறையும் பொருள் நிலே திரியாமை ஆண்டு அடங்கும் என்பர் இளம்பூரணர். வினைச்சொற்கள் எதிர்மறுத்துரைத்தற்கண் தத்தம் பொருள் நிலே திரியாதவாறு போல, வேற்றுமையுருபுகளும் எதிர்மறுத்துச் சொல்லுமிடத்துத் தத்தம் உருபினின்றும் திரியாதனவாய் வரும். இவ்விரு விதிகளேயும் இணைத்துக் கூறும் முறையில் அமைந்தது, 353. உருபும் வினையும் எதிர்மறுத் துரைப்பினும் திரியா தத்தமீற் றுருபி னென் ப. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எட்டு வேற்றுமையுருபுகளும் மூவகை வினைச்சொற்களும், அவற்றின் பொருளே எதிர்மறுத்துச் சொல்லுமிடத்தும் தத்தம் ஈற்றினின்றும் அவ்வவ்வுருபினின்றும் வேறுபடா என்று சொல்லு வர் புலவர்?’ என்பது இதன் பொருள். உருபின் என்புழிவரும் இன்னுருபின ஈற்று என்பதன் கண்ணும் கூட்டித் தத்தம் உருபின் ஈற்றின் திரியா என எதிர் நிரனிறையாகப் பொருள் கொள்க. (உ-ம்) சாத்தன் வாரான், குடத்தை வனேயான், வாளால் எறியான், புல்லர்க்கு நல்கான், நிலேயின் இழியான், பொருளி னது இன்மை, தீயர்கட் சாரான், சாத்தா சாயல் எனவும், நடவான், நடவாத, நடவாது எனவும் வரும். 18