பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 பொருள் கவர்க்கும். வல்லம் எறிந்த நல்லிளங்கோசர். தந்தை மல்லல்யானைப் பெருவழுதி என்றவழி வல்லம் எறிதல் பெருவழுதிக்கேயன்றி நல்லிளங்கோசர்க்கும் ஏற்கு மாகலின் பொருள் கவர்க்கும். இவ்வாறு கவர்படு பொருள்பட இடை நிற்பன சிவனுக்குறிப்பினவாகும். * எச்சொல்லா யினும் என்ற தல்ை உழுது ஓடிவந்தான்; கவளங் கொள் ளாக் களித்த யானே? என எச்சச்சொற்களும் இடைநிற்றல் கொள்ளப்படும். 'அறத்தை அரசன் விரும்பின்ை; உண் டான் பசித்த சாத்தன் என ஏனத் தொடர்க்கண்ணும் பிற சொல் இடைநிற்றல் ஒன்றென முடித்தலாற் கொள்க: : என்பர் நச்சிஞர்க்கினியர். இவ்வாறு பெயரெச்ச வினேயெச்சங்களும் வேற்றுமை யுருபுகளும் முற்றுவினேகளும் கொண்டுமுடியும் பெயர்க்கும் வினேக்கும் இடையிலே, அவற்ருெடு பொருந்துங் குறிப்பிஜன் யுடைய, பிறசொற்கள் நிற்றலே இடைப்பிறவரல் என நீக்காது அறிஞர் ஏற்றுக்கொள்வர். இதனை விளக்குவது, 355. உருபு முற்றி ரெச்சங் கொள்ளும் பெயர் வினே யிடைப்பிற வரலுமா மேற்பன. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். உருபுகளும் முற்றுவினைகளும் பெயரெச்ச வினையெச்சங் களும் தாம்தாம் கொள்ளும் பெயர்க்கும் வினைக்கும் நடுவே அவ்விடத்திற்குப் பொருந்துவனவாகிய பிறசொற்கள் வரவும் பெறும் என்பது இதன் பொருளாகும். உம்மை - எதிர்மறை. இடைப்பிறவருதல் ஒருதலேயன்று என்பதாம். (உ.ம்) அறத்தை அழகுபெருகச் செய்தான்; வந்தான் அவ்வூர்க்குப்போன சாத்தான், வந்த அவ்வூர்ச் சாத்தன், வந்து சாத்தன் இற்றைநாள் அவனுார்க்குப் போயினுன் எனவரும .