பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 செய்யுமென்னும் முற்றுக்குரியனவாக உரையாசிரியர் உய்த் துணர்ந்து கூறிய விதியையும் இயைத்து விளக்கும் முறையில் அமைந்தது, 340. செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் செய்யுளுள் உம்முந் தாகலும் முற்றேல் உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் உளவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தின் இறுதி உயிர்மெய் கெடுதலும், செய்யுளகத்து அவ்வெச்சத்தின் இறுதி உம்மை உந்து எனத்திரிதலும், செய்யும் என்பது முற்ருயின் அதனிறுதி உயிரேனும் உயிர்மெய்யேனும் கெடுதலும் உளவாம்?? என்பது இதன் பொருளாகும். செய்யுளுள் உம் உந்து ஆம்? எனவே, உயிர்மெய் கெடு தலும் செய்யுமென்னும் முற்றின் உயிர் கெடுதலும், உயிர்மெய் கெடுதலும் ஆகிய ஏனையவை, வழக்கு, செய்யுள் ஆகிய ஈரிடத்தும் ஆமென்பதும், முற்றேல்? எனவே, செய்யுமென் னும் பெயரெச்சமே செய்யுமென்னும் முற்ரும் என்பதும், சேறலும் ஆகலும் ஏகலும் எனவரும் இழிவுசிறப் பும்மைகளால் இத்திரிபுகள் ஒருதலையல்ல என்பதும் நன்கு பெறப்படும். உங்க.ை செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னு.ை டத்தே வாராக் காலம். இஃது இறந்தகாலச்சொல் ஏனைக்காலச் சொல்லொடு இயையு மாறு கூறுகின்றது. (இ-ஸ்) செய்து என்னும் வினையெச்சத்தினது இறந்த காலம் வாராக்காலத்தை எய்தும் இடமுடைத்து. எ-று. செய்து என் எச்சத்து இறந்தகாலம் என்றது, அவ்வெச் சத்தை முடிக்கும் சொல்லான் உணர்த்தப்படும் தொழிற்கு அவ்வெச்சத்தான் உணர்த்தப்படும் தொழில் முன்நிகழ்தலே.