பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 அது வாராக்காலத்தை எய்துதலாவது, அத்தகைய முன் னிகழ்வு சிதையாமல், செய்து என்னும் எச்சம் எதிர்காலத்து வருதல். வாராக்காலம் - எதிர்காலம். (உ.ம்) நீ உண்டு வருவாய்; உழுது வருவாய் எனச் செய்து என்னும் வாய்பாட்டு எச்சம், தனக்குரிய இறந்த காலம் சிதையாமல் எதிர்காலத்து வந்தமை காணலாம். 'எய்திடனுடைத்தே வாராக்காலம்’ என்றதனன், உண்டு வந்தான், உழுது வந்தான்’ எனச் செய்து என்னும் எச்சம் இறந்தகாலத்து வருதலே அதன் இலக்கணம் என்பதாம். 'ஒன்றென முடித்தலாற் செய்யூ, செய்பு என்பனவற்றிற்கும் ஒழிந்த எச்சங்கட்கும் இம்மயக்கங் கொள்க’ என்பர் நச்சிர்ைக் கினியர். செய்து என்னும் வினையெச்சமுணர்த்தும் காலநுட்பம் பற்றிய இவ்விதி, சுருக்க நூலாகிய நன்னூலில் இடம் பெற்றிலது. உச0. முந்நிலேக் காலமுந் தோன்று மியற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொற் கிளத்தல்வேண்டும். இது நிகழ்காலச் சொல் ஏனேக் காலங்களையும் உணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) மூன்றுவகைப்பட்ட நிலைமையினேயுடைய காலங் களிலும் உளதாம் இயல்பினைப் பொருந்திய எவ்வகைப்பட்ட பொருள்களையும் நிகழ்காலத்திற்குரித்தாய் (ஏனைக் காலங் களேயும் உள்ளடக்கி) நிற்கும் பொருள் நிலேமையையுடைய செய்யும் என்னும் பொதுச்சொல்லாற் சொல்லுதல் வேண்டும் ஆசிரியன். எ-று. எம்முறைச் சொல்லும் என்புழிச் சொல் என்றது, பொருளே. நிகழ்காலமுணர்த்தும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச் சொல், முக்காலத்திற்கும் பொதுவாய், முற்றும் பெயரெச்ச முமாய் நிற்றல் நோக்கி நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொல்? என்ருர்,