பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 'முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைப் பொருளுமாவன, மலேயதுநிலையும் ஞாயிறு திங்களது இயக்கமும் முதலாயின. அவற்றை இறந்தகாலச் சொல்லானும் எதிர்காலச் சொல்லானும் ஏனே நிகழ்காலச் சொல்லா னும் சொல்லாது இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யுமென்னுஞ் சொல்லா ற் சொல்லுக என்றவாறு: பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் எனவே, செய்யுமென் னும் முற்ருலும் பெயரெச்சத்தாலும் கூறுக என்பதாம் (உ. ம்) மலே நிற்கும்; ஞாயிறு இயங்கும்; திங்கள் இயங்கும் எனவும், வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரி தருந் தண்கடல் வையத்து’ எனவும் வரும். இச்சூத்திரத்தை அடியொற்றி யமைந்தது, 332. முக் காலத்தினு மொத்தியல் பொருளேச் செப்புவர் நிகழுங் காலத் தானே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். முேக்காலத்தினும் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள் களே நிகழ்காலச் சொல்லானே சொல்லுவர் தொல்லாசிரியர் : என்பது இதன் பொருளாகும். இங்கு நிகழுங்காலம்’ என்றது நிகழ்காலமுணர்த்தும் செய்யுமென்னும் வாய்பாட்டு வினேச்சொல்லை. 'நிகழுங்காலத்து மெய்ந்நிலைப்பொதுச்சொல்? எனத் தொல்காப்பியனுர், சுட்டி யதும் இதுவே யாறு ஒழுகும், மலே நிற்கும், நிலம் கிடக்கும், நீர் குளிரும், தீச்சுடும், வளியுளரும் - பண்டும் இன்றும் மேலும் என முக்காலப் பொதுவாக்குக. என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் மயிலைநாதர், உசக. வாராக்காலத்தும் நிகழுங் காலத்தும் ஒராங்கு வரூஉம் வினேச்சொற் கிளவி