பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 இல்லாவிடத்து நிகழ்காலத்தான் உறுதிபெறத் தோன்றும் பொருளேயுடையதாம். எ-று.

  • முயற்சியும் தெய்வமுமாகிய காரணங்களுள் தெய்வம் (ஊழ்) சிறந்தமையான், அதற்குக் காரணமாகிய தவஞ் செய் தல் த யைக்கோறல் முதலாகிய தொழிலே மிக்கது. என்ருர், தெய்வமாகிய இருவினே மிக்கதன்கண் வினேச்சொல்லாவன தவஞ் செய்தான், தாயைக் கொன்ருன் என்னுந் தொடக்கத் தன. அப்பண்பு குறித்த வினேமுதற்கிளவிய வது, சுவர்க்கம் புகும், நிரயம்புகும் என்பன. யாவன் தவஞ் செய்தான் அவன் சுவர்க்கம் புகும்; யாவன் தாயைக் கொன்ருன் அவன் நிரயம் புகும் எனவும், ஒருவன் தவஞ் செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும் மிக்கதன் வினைச் சொல் நோக்கி, அம்மிக்கதன் திரிபில் பண்பு குறித்த வினே முதற்கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டு கொள்க’ என இச் சூத்திரப் பொருளே விளக்குவர் சேனுவரையர்.

மிக்கதன் மருங்கின் வினேச்சொல் என்றது, நன்மையும் தீமையும் ஆகிய பயன் விளைப்பதில் மிக்குத் தோன்றும் நன்றுந் தீதுமாகிய செயலினேக் குறித்த வினேச்சொல்லே. உலகிற் பெரும் பாலோரால் உடன்பட்டுரைக்கும் மிகுதியுடைமை பற்றி 'மிக்கது’ எனப்பட்டது. அஃது அறம் பாவம் என்னும் வினைப் பாகுபாடு. அப்பண்பு குறித்த வினைமுதற்கிளவி என்றது, மிக்கதாகிய அத்தொழிற் பயனுறுதல் அவ்வினைமுதலுக்கு இயல் பாதலேக் குறித்த சொல். அவை யாவன துறக்கம் புகுதல் நிரயம் புகுதல் முதலாயின. இத்தொழிற்கு வினைமுதல் இன்னர் என ஒருவரைக் குறித்துச் சுட்டப்படாத பொதுநிலையில் என்பார்) செய்வது இல்வழி' என்ருர் . செய்வது - வினைமுதல். தவஞ் செய்யிற் சுவர்க்கம் புகுவன் என எதிர்காலத்தாற் சொல்லப் படுவதனே நிகழ்காலத்தாற் சொல்லுதல் வழுவாயினும் அமைக வென வழுவமைத்தவாறு. உசங். இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி இருவயி னிலேயும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இது, ஒருசார் முற்றுச்சொற் பொருள்தரும் வேறுபாடு கூறு கின்றது.