பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 ரங்களாலும் தொல்காப்பியனர் குறித்த வினைச்சொற்களின் காலமயக்கம் பற்றிய விதிகளை முறையே தொகுத்துக் கூறும் நிலேயில் அமைந்தது, 383. விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும் பிறழவும் பெறு உமுக் காலமு மேற்புழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். விரைவு, மிகுதி, தெளிவு, இயற்கை என்னும் இந்நான் கும் பற்றி முக்காலமும் தம்முள் மயங்கி வரவும்பெறும்; ஏற்கு மிடத்து?’ என்பது இதன் பொருளாகும். 'உம்மையா ன் மயக்கம் ஒருதலேயன்று: என்பர் மயிலே நாதர். இவற்றுக்கு உதாரணம் மேற்காட்டியனவே. உசசு. செயப்படு பொருளேச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இது வினைச்சொற்கண் மரபுவழுவமைதி கூறுகின்றது. (இ-ள்) செயப்படுபொருளைச் செய்த வினைமுதல் போலத் தொழிற்சொல் புணர்த்துச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலும் மரபாகும். எ-று. வழக்கின்கண் இயலும் மரபு எனவே, இலக்கணமன்று என்றவாரும். (உ-ம்) திண்ணே மெழுகிற்று; கலம்கழி இயிற்று எனவரும். திண்ணே மெழுகப்பட்டது, கலம் கழுவப்பட்டது என வரற்பாலது அவ்வாறன்றி வினேமுதல் வாய்பாட்டால் வருதலும் வழக்கினுள் உண்மையால் அமைக என மரபுவழு வமைத்த வாறு. இங்ங்னம் வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதின் அடப்பட்டமை நோக்கி அரிசிதானே அட்டது: எனச் செயப்படுபொருளே வினைமுதலாகக் கூறலும் வழக்கியல் மரபு என்றற்குத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபு? என்ருர் . இதனை வடநூல்வழித் தமிழாசிரியர் கருமக் கருத்தன்