பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 என்பர். இனி ஒன்றென முடித்தலால் இவ்வாள் எறியும்? எனக் கருவியைத் தானேசெய்வதாகக் கூறும் கருவிக் கருத்தாவும், அரசன் எடுத்த ஆலயம்’ என ஏவின&ன வினேக் கருத்தாவாகக் கூறும் ஏதுக்கருத்தாவும் கொள்க: என்பர் நச்சிஞர்க்கினியர். இச்சூத்திரப் பொருளையேயன்றி இதன் சொல்லேயும் பொன்னேபோற் போற்றியெடுத்தாளும் முறையில் அமைந்தது, 399, செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தனக்கெனச் செயலின்றிப் பிறரது தொழிற்பயனுறுவ தாகிய செயப்படு பொருளேத் தனக்கெனத் தொழிலுடைய கருத்தாவைப் போல வைத்துத் தொழில் நிகழ்த்தியதாகக் கூறுதலும் வழக்கின் கண் உரித்தாம்?’ என்பது இதன் பொருள். எனவே, இலக்கணமன்றேனும் கருமத்தையும் கருவியை யும் கருத்தாவாகச் சொல்லினும் அமைக வென்பதாயிற்று: எனக்கூறிப் பின்வருமாறு உதாரணங்காட்டுவர் மயிலேநாதர். (உ-ம்) இல்லம் மெழுகிற்று, சோறு அடா நின்றது, பொன் வரும் எனவும், சுரிகை குத்தும், எழுத்தாணி எழுதா நின்றது, வாள் எறியும் எனவும் வரும். உசஎ. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி. இஃது ஓர் பொருண்மை குறியாது இறந்தகாலமும் எதிர் கால மும் மயங்கும் என்கின்றது. (இ.ள்) இறப்பும் எதிர்வுமாகிய இரண்டு காலமும் மயங்கு மொழிப் பொருளாய் விளங்கத் தோன்றும். எ-று. (உ-ம்) இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர்; *நாளே அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ என்