பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 செய்குவை' எனவரும். பண்டு விளையாடினர், நாளே வருவன் எனவரற்பாலன அவ்வாறன்றித் தம்முள் காலம் மயங்கக் கூறினும் அமைக எனக் காலவழு அமைத்தவாறு. உச.அ. ஏனேக் காலமும் மயங்குதல் வரையார். இது நிகழ்காலம் ஏனையவற்ருெடு மயங்குமென்கின்றது. (இ.ஸ்) இறந்தகாலமும் எதிர்காலமுமேயன்றி ஏனே நிகழ் காலமும் அவற்ருெடு மயங்குதலே நீக்கார் ஆசிரியர் . எ.று. (உ-ம்) இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும் எனவும் நாளேவரும் எனவும் வரும். இறந்தகாலமும் எதிர் காலமும் மயங்கும் மயக்கம் வழக்கிற் பயின்று வருதலானும் நிகழ்கால மயக்கம் அத்துணேப் பயின்று வாராமையானும் இவற்றை இரண்டு சூத்திரங்களாற் பிரித்துக் கூறிஞர் தொல்காப்பியர். 'மூன்று காலமும் தம்முள் மயங்கு மென்ருரேனும், ஏற்புழி யல்லது மயங்காமை கொள்க. ஏற்புழிக் கொள்ளவே, வந்தாஐன வரும் என்றலும், வருவானே வந்தான் என்றலும் இவை முதலா யின வெல்லாம் வழுவென்பதாம்?’ எனச் சேவைரையர் கூறும் விளக்கம் உளங்கொளத்தகுவதாகும். தொல்காப்பியர் குறித்த காலமயக்கங்கள் எல்லாவற்றையும் பிறழவும் பெறுTஉம் முக்காலமும் ஏற்புழி (நன்-333) என்ற தொடரால் தழுவிக் கொண்டார் பவணந்தி முனிவர்.