பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இடையியல் இடைச் சொற்களின் இலக்கணம் உணர்த்தினமையால் இடையியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையை யும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின் பின் கூறப்பட்டது. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச் சொல்லாயிற்று என்பர் சேை வரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினேயும் போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினே களேச் சார்ந்து புலப்படுமென்றும், பெயரும் வினேயும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடைச் சொல்லாயிற்று என்றும் கூறுவர் தெய்வச்சிலே யார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையும் தம்மாலன்றித் தத்தங் குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறு மாகாது இடை நிகரணவாய் நிற்றலின் இடைச்சொல் லெனப்பட்டன என்பர் சிவஞானமுனிவர். இவ்வியலிள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47.ஆகக் கொள்வர் தெய்வச் சிலேயார் . உசகூ. இடையெனப் படுப பெயரொடும் வினேயொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. இஃது, இடைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறு கின்றது. (இ-ள்) இடைச் சொல்லென்று சொல்லப்படுவன பெய ரொடும் வினையொடும் வழக்கிற் பொருந்தி நடக்கும்; தாமாக நடக்கும் இயல்பில. எ-று. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்று வழி மருங்கிற்ருேன்றும் என்ற தல்ை இடைச்சொல் பெயரும் வினேயும் சார்ந்து வரும் என்பது பெறப்பட்டது. பெயரொடும்