பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 வினையொடும் நடைபெற்றியலும் என ஈண்டு மீண்டும் கூறியது, பெயரும் வினேயும் உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருளுடைய அல்ல என்றவாறு?’ என இதன் பொருளே விளக்குவர் சேனுவரையர். எனவே இடைச் சொற்கள் பொரு ளுணர்த்தும் வழித் தமக்கெனப் பொருளின்றிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் அவற்றைச் சார்ந்தல்லது தனித்துவாரா என வலியுறுத்தவாறு. (உ-ம்) அது கொல் தோழி காமநோயே? எ-ம் வருகதில் லம்மவெஞ் சேரி சேர எ-ம் கொல், தில் என்னும் இடைச்சொற்கள் முறையே பெயரையும் வினையையும் சார்ந்து நின்று அப்பொருளே வெளிப்படுத்தவாறு காண்க . பெயரையும் வினையையும் சார்ந்துவருதல் இடைச்சொற்கும் உரிச்சொற்குமுரிய பொதுவிலக்கணம். தமக்கெனப் பொரு ளின் மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாகும். பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் தமக் கியல்பில: எனப் பொதுப்படக் கூறியவதனால் இடைச்சொற் கள் தம்மாற் சாரப்படுஞ் சொல்லின் வேருய் வருதலேயன்றி, உண்டனன், உண்டான் எ-ம். என்மனர், என்றி.சினேர். எ-ம். அருங்குரைத்து எ-ம். அச்சொற்களுக்கு உறுப்பாய் வருதலும் கொள்ளப்படும். உடும். அவைதாம், புணரிய னிலையிடைப் பொருணிலேக் குதநவும் வினேசெயன் மருங்கிற் காலமொடு வருநவம் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவம் அசைநிலைக் கிளவி யாகி வருநவம் இசை நிறைக் கிளவி யாகி வருநவம் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவம்