பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295. ஒப்பில் வழியாற் பொருள்செய் குநஷமென் றப்பண் பினவே துவலுங் காலே. இஃது அவ்விடைச் சொற்களின் பாகுபாடு கூறுகின்றது. (இ-ஸ்) முற்கூறிய இடைச்சொற்கள்தாம் இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள் நிலைக்கு உதவிசெய்து வருவனவும், வினேச்சொற்களே முடிக்கு மிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியன வாய் நிற்பனவும், வேற்றுமைப்பொருட்கண் வேற்றுமையுருபு களாய் வருவனவும், தமக்கோர் பொருளின்றித் தாம்சார்ந்த பெயர் வினைகளே அசையப் பண்ணும் நிலேமையவாய் வரு வனவும், செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வரு வனவும், தத்தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும், ஒப்புமை தோன்ருதவழி அவ்வொப்புமைப் பொருண்மையை யுணர்த்தி வருவனவும் எனச் சொல்லப்பட்ட ஏழியல்பினையுடையன சொல்லுமிடத்து. எ-று. புேணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ என்றது, அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொரு ளுக்கு உரியன இவையென எளிதிற் பொருளுணர்ந்து கொள் ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று முதலிய சாரியைகளே. இவை எழுத்ததிகாரத்திற் கூறப்பட்டன. வினேசெயல் மருங் கிற் காலமொடு வருந’ என்றது, வினைச்சொல்லே முதனிலேயும் இறுதிநிலையும் இடைநிலையுமாகப் பிரித்துச் செய்கை செய்யு மிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் அதனகத்து உறுப் பாய் நிற்பனவற்றை . இவை வினேயியலுட் கூறப்பட்டன. வேற்றுமைப்பொருள்வயின் உருபாகுந என்றது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகளே. இவை வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைத்தல் - சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை என்பது காரணப்பெயர். அசைநிலைக்கிளவியாகி வருவன மியா, இகும் முதலாயின. செய்யுட்கண் இசை நிறைத்து நிற்பன இசை நிறையாம். இன்ச நிறையாவன ஏ முதலாயின. தத்தங்குறிப்பிற் பொருள் செய்குந என்றது, தத்தங்குறிப்பிற்ை பொருளுணர்த்தும் 19