பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 தில் என்னும் இடைச்சொல் ஈறுதிரிந்து வந்தது. வருகதில்லம்ம வெஞ்சேரிசேர என்புழி தில் என்னும் இடைச்சொல்முன்னர் அம்ம என்னும் இடைச்சொல் நிற்றலின் பிறிது அவண் நிலையலாயிற்று. அவைதாம் எனப் பொதுவுகையான் நோக்கிளுரேனும் இவ் விலக்கணம் இவ்வோத்தின் கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை, தத்தங் குறிப்பிற் பொருள்செய்வன ஆகிய மூன்றற்குமெனக்கொள்க எனவும், அன்ன வையெல்லாம்: என்றதனன், மன்னேச்சொல்? கொன்னேச்சொல்: எனத் தம்மையுணர நின்றவழி ஈறுதிரிதலும், னகாரை முன்னர்? என எழுத்துச் சாரியை ஈறுதிரிதலுங்கொள்க’ எனவும் கூறு வர் சேணுவரையர். இடைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணமும் அவற்றின் பாகுபாடும் அவற்றுக்கோர் பொதுவிதியும் உணர்த்தும் இம் மூன்று சூத்திரப் பொருள்களேயும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 419. வேற்றுமை வினேசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசை நிறை யசைநிலே குறிப்பெனெண் பகுதியிற் றணித்திய லின்றிப் பெயரினும் வினேயினும் பின் முன் னேரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வேற்றுமையுருபு வினையுருபு சாரியையுருபு உவமைவுருபு இவைகளாகியும், தத்தம் பொருள் காட்டுவனவும் இசை நிறைப்பனவும் அசைநிலையாய் வருவனவும் குறிப்பின் வருவன வும் என்னும் எட்டுப்பகுதியவாய்த் தாமாகத் தனித்து நடத்த லின்றிப் பெயர் வினைகளாம் சொற்களின் பின்னுயினும் முன்ன யினும் ஓரிடத்து ஒன்ருகவோ பலவாகவோ வந்து நிற்பது இடைச் சொல்லாகும்?’ என்பது இதன் பொருள். தத்தங் குறிப்பிற் பொருள் செய்வன: எனத் தொல்காப்பிய