பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 உடுங். விழைவே காலம் ஒழிசையிசைக் கிளவியென் றம் முன் றென்ப தில்லைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்) தில் என்னும் இடைச்சொல் விழைவு குறித்து நிற்பதும், காலங் குறித்து நிற்பதும், ஒழிந்து நின்ற சொற் பொருளே நோக்கி நிற்பதும் என மூன்ரும். எ-று. (உ-ம்) வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே?? என்புழித் தில் என்னும் சொல் அரிவையைப் பெறுதற்கண் உளதாகிய விழைவின் கண் வந்தது. விழைவு-விருப்பம். பெற்ருங் கறிகதில் லம்மவிவ் ஆரே?? என்புழிப் பெற்றகாலத்து அறிக: எனக் காலங் குறித்து நின்றது. வருகதில் லம்மவெஞ் சேரிசேர22 என்புழி வந்தால் இன்னது செய்வேன் என ஒழியிசைப் பொருள் நோக்கி நின்றது. தில் என்னும் இடைச்சொற் பொருளை 480. விழைவே காலம் ஒழியிசை தில்லே. எனவரும் சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார் . உடுச. அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பா னுன்கே கொன்னேச் சொல்லே. இதுவும் அது . (இ.ஸ்) கொன் என்னும் இடைச்சொல் அச்சப் பொருள், பயனின்மைப் பொருள், காலப்பொருள், பெருமைப்பொருள் என நான்கு பொருளில் வரும். எ-று.