பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 ஒழியிசையும் வினவும் சிறப்பும் எதிர்மறையும் தெரிநிலை யும் கழிவும் அசைநிலையும் பிரிப்பும் என எட்டுப் பொருட் பகுதி களையுடையது ஒகாரவிடைச் சொல்லாம்?? என்பது இதன் பொருளாகும். கழிவு என்பது, ஒன்றைச் செய்யாது கழிந்தமைக்கு இரங்குதல், நைதலொன்றி நல்லறஞ் செய்கிலார் ஒஒ தமக்கோர் உறுதியுணராரோ?? என்புழி ஒகாரம் கழிவு பொருண்மையில் வந்தது. காணிய வம்மினே கங்குலது நிலேயே ? ? என்புழி ஒகாரம் அசைநிலேயாய் நின்றது. உடுள். தேற்றம் விஞவே பிரிநிலை யெண்ணே யீற்றசை யிவ்வை ந் தேகா ரம்மே. இஃது ஏகார விடைச்சொற் பொருள் தருமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) தேற்றம், வின, பிரிநிலே, எண், ஈற்றசை என இவ்வைந்தாகும் ஏகாரவிடைச்செ ல், எ-று. தேற்றம்-தெளிவு பொருண்மை. ஈற்றசையாவது செய்யு ளின் இறுதிக்கண் அசைநிலையாய் நிற்பது. செய்யுளின் இடை யிலும் வருதலின் ஈற்றசை என்பது மிகுதி நோக்கிச் சென்ற பெயர், (உ-ம்) உண்டேன் மறுமை’ என்ருங்குத் தெளிவின்கண் வருவது தேற்றேகாரம். நீயே கொண்டாய் என்ருங்கு வினப் பொருளுணர்த்துவது விேைவகாரம், அவருள் இவனே கள்வன்? என்ருங்குப் பிரித்தல் பொருளில் வருவது பிரிநிலேயே காரம். நிலனே நீரே தீயே வளியே விசும்பே' என்ருங்கு எண்ணுதற் பொருளில் வருவது எண்ணேகாரம். கடல்போற் ருேன்றல காடிறந்தோரே? என்ருங்குச் செய்யுளிறுதிக்கண் அசை நிலேயாய் நிற்பது ஈற்றசையேகாரம். யானே கொண் டேன்? என்புழி, நீயே கொண்டாய் என்னும் எதிர்மறைப்