பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 (உ-ம்) மலேவான் கொள்கென வுயர்பலி தூஉய்' என வினைப்பொருளிலும், துண்ணெனத் துடித்தது’ எனக்குறிப்புப் பொருளிலும், ஒல்லென வொலித்தது? என இசைப்பொரு ளிலும், வெள்ளென விளர்த்தது எனப் பண்புப்பொருளிலும், நிலனென நீரெனத் தீயென வளியென விசும்பென என எண்ணுதற் பொருளிலும், அழுக்காறெனவொரு பாவி’ எனப் பெயர்ப் பொருளிலும் எனவென்னும் இடைச்சொல் வந்தவாறு கண்டுகொள்க. எழுத்ததிகாரத்துள் எனவென் எச்சம்? (எழுத் - உளச) என ஒதுதலான், இவையெல்லாம் வினை யெச்சப் பொருண்மையுணரவும் பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும்?? என்பர் தெய்வச்சிலையார். உடுக. என்றென் கிளவியு மதனே ரற்றே. இஃது என்றென்னும் இடைச்சொற் பொருள்தருமாறு கூறு கின்றது. (இ-ள்) என்று என்னும் இடைச்சொல்லும் என? என்பதுபோல அவ் ஆறுபொருளும் குறித்துவரும். எ-று. (உ-ம்) நரைவரு மென்றெண்ணி எனவும், விண் ணென்று விசைத்தது? எனவும், ஒல்லென்றெலிக்கும் ஒலி புனலூரற்கு எனவும், பச்சென்றுபசுத்தது எனவும், நில னென்று நீரென்று தீயென்று வளியென்று விசும்பென்று: எனவும், பாரியென்ருெருவனுளன்? எனவும் என்றென்னும் இடைச்சொல் வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் என்னும் பொருளில் முறையே வந்தவாறு காண்க. இவ்விரு சூத்திரப் பொருளையும் தொகுத்துக்கூறும் முறை யில் அமைந்தது, 428. வினை பெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும் எனவெனு மொழிவரும் என்றும் அற்றே. என்னும் நன்னூற் சூத்திரமாகும்.