பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கொள்ளப்படும். அஃறிணைப் பலவின்பாற்குரியதாக இங்குக் காட்டப்பெற்ற 'உண்ப? என்பது எதிர்காலம் குறிக்கும் பகர விடைநிலேயை ஊர்ந்துவந்த அகரவீறெனவும், மேல் உயர் திணையிற் பல்லோரறியுஞ் சொல்லாகக் காட்டப்பெற்ற உண்ப என்பது பகரவீறெனவும் பகுத்துணர்தல் வேண்டும். இத் தொடக்கத்தன பல பொருளொரு சொல் எனப்படும். ஆகார வீறு, உண்ணு, தின்ன என்ருங்கு மூன்று காலத்தை யும் எதிர்மறுக்கும் எதிர்மறைக்கண் அல்லது பால் விளங்கி நில்லா என்பர் இளம்பூரணர். அவரது உரையினே அடியொற்றி யமைந்தது, 328. அஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஆவே எதிர்மறைக் கண்ணதாகும் என்றமையான், ஏனே விகுதிகள் உடன்பாட்டினும் எதிர்மறையினும் வருமென்பது பெற்ரும். தொல்காப்பியர் கூறிய வகர விகுதியினைப் பவணந்தியார் அகரவிகுதியுள் அடக்கிக் கூறியுள்ளார் என்பது, வவ்வீறு அகரவீருயடங்குதலானும் கள்ளிறு தானே நின்று ஒருவினைக் கீருய் வாராமையானும் ஈண்டுக் கொண்டிலர் என்னும் மயிலே நாதர் உரைவிளக்கத்தாற்புலனும் . (). இருதினே மருங்கின் ஐம்பா லறிய ஈற்றினின்றிசைக்கும் பதினே ரெழுத்து ந் தோற்றந் தாமே வினேயொடு வருமே. இது, மேற்குறித்த பாலுணர்த்தும் ஈருகிய எழுத்து இனத் தென்றும் அவை வினேக்கண் நின்றுணர்த்துமென்றும் கூறு கின்றது.