பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 'வினே, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு என்னும் ஆறுபொருளினும் எனவென்னும் இடைச்சொல் வரும். என்று. என்னும் இடைச்சொல்லும் அவ் ஆறு பொருளினும் வரும். ! என்பது இதன் பொருளாகும். உசும். விழைவின் றில்லே தன்னிடத் தியலும். இது, முற்கூறிய தில்’ என்னும் இடைச்சொற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) (விழைவு, காலம், ஒழியிசை என்னும் மூவகைப் பொருள்களுள்) விழைவின்கண் வரும் தில்லென்னும் இடைச் சொல் தன்மையிடத்தில் வரும். எ.று. தன்னிடம் - தன்மையிடம் , தன்னிடத்தியலும் எனவே தில் என்பது ஏனேப் படர்க்கை முன்னிலையிடங்களில் வாராது என நியமித்தவாரும். விழைவின் தில்லே தன்னிடத்தியலும் எனவே ஒழிந்த காலப் பொருளிலும் ஒழியிசைப் பொரு ளிலும் வரும் தில் என்பன மூவிடத்திற்கும் உரியன என்பதும் பெறப்படும். தில், தில்லே என ஈறுதிரிந்தது . உதாரணம் மேற் காட்டியவே கொள்க. உகூக. தெளிவி னேயுஞ் சிறப்பி ைேவும் அளயி னெடுத்த விசைய வென்ப. இஃது ஏகார ஓகாரங்கள் மிக்கு ஒலிக்குமாறு கூறுகின்றது. (இ-ள்) தெளிவு பொருண்மைக்கண்வரும் ஏகாரமும், சிறப் புப் பொருண்மைக் கண் வரும் ஒகாரமும் இரண்டு மாத்திரை யின் மிக்கு மூன்று மாத்திரையினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் எ-று. ஏகார ஓகாரங்கள் அளபெடையாய் வருதல் மேற்காட்டப் பட்டவற்றுள்ளும் பிறவிடத்தும் கண்டுகொள்க. உசுஉ. மற்றென் கிளவி வினேமாற் றசைநிலை யப்பா லிரண்டென மொழிமனர் புலவர். இது, மற்று என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது.