பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 (இ-ள்) மற்று என்னுஞ்சொல், வினைமாற்றும் அசை நிலையும் என இரண்டாம் என்பர் ஆசிரியர். எ-று. வினைமாற்று என்பது, ஒரு வினை நிகழ்ச்சியை மாற்றுதற் பொருள்பட வருவது மற்றறிவாம் நல்வினையாமிளேயம்’ என்ற வழி, அறஞ்செய்தல் பின் அறிவாம்’ என அக்காலத்து வினே மாற்றுதலான் மற்று என்பது வினைமாற்றின்கண் வந்தது. அதுமற் றவலங் கொள்ளாது, நொதுமற் கலுழுமிவ் வழுங்க லூரே?? என்புழி மற்று அசைநிலையாய் வந்தது. மற்று என்னும் இவ்விடைச்சொல் வினே மாற்ருகவும் அசை நிலையாகவும் வருதலேயன்றிச் சொல்கின்றது ஒழிய இனி வேறென்று எனப் பிறிது என்னும் பொருளிலும் இலக்கியங் களிற் பயில்கின்றது. மற்று என்பது பிறிது’ எனும் இப் பொருளில் வழங்குதற்கு இனி மற்றென்றுரை என உதா ரணங் காட்டினர் நச்சிர்ைக்கினியர். மற்று என்பது வினே மாற்று, அசைநிலை, பிறிது என்னும் மூன்று நிலேயிலும் பயிலக் கண்ட பவணந்தியார், 432. வினேமாற் றசைநிலை பிறிதெனு மற்றே. எனச் சூத்திரஞ்செய்தார். மற்று என்னும் இடைச்சொல் வினைமாற்று, அசைநிலை, பிறிது என்னும் இம்மூன்று பொருளையும் தரும், என்பது இதன் பொருளாகும். (உ-ம்) ஊழிற் பெருவலி யாவுள' மற்றென்று சூழினுந் தான்முந் துறும். என்புழி மற்றென்று’ என்பது ஊழல்லாத பிறிது ஒன்று? என்னும் பொருள் தந்தமை காண்க. உசுங். எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. இஃது எற்று என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறு கின்றது.