பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 433. மற்றைய தென்பது சுட்டிய தற்கினம். எனவரும் நன்னூற்சூத்திரமாகும். மேற்றையது என்னும் இடைச்சொல் சுட்டியதனையொழிய அதற்கு இனமானது ஒன்றைக் குறிக்கும்.’’ என்பது இதன் பொருளாகும். உசுடு, மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும். இது, மன்ற என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மன்ற என்னுஞ் சொல் தெளிவு பொருண்மையை உணர்த்தும். எ-று. (உ-ம்) கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே?' என வரும், மடவை மன்ற என்புழி மன்ற என்னும் இடைச்சொல் மடவையே எனத் தேற்றப்பொருளில் வந்தமை காண்க . உசுசு. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. இது, தஞ்சம் என்னுங் சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) தஞ்சம் என்னும் இடைச்சொல் எளிது என்னும் பொருண்மையையுடையது. எ-று. (உ-ம்) முரசுகெழுதாயத் தரசோ தஞ்சம் (புறம்-73) எனத் தஞ்சக்கிளவி அரசு கொடுத்தல் எளிது? என எண்மைப் பொருளுணர்த்தியவாறு காண்க: உசுஎ. அந்தி லாங்க வசைநிலேக் கிளவியென் ருயிரண் டாகு மியற்கைத் தென்ப. இஃது அந்தில் என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறு கின்றது. (இ-ள்) அந்தில் என்னுஞ்சொல் ஆங்க என்னும் இடப் பொருளுணர்த்துதலும், அசைநிலைச் சொல்லாதலும் என அவ் விரண்டு கூரும் இயற்கையையுடையது என்று கூறுவர் புலவர். எ-று.