பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 (இ-ள்) ( உயர்திணை அஃறிணையென்னும்) இருதிணைக் கண்ணும் உளவாகிய (ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல. என்னும்) ஐந்து பாலேயும் அறிய அவ்வச் சொல்லின் இறுதிக் கண் நின்று ஒலிக்கும் பதினேரெழுத்தும் (பாலுணர்த்துதற்குத்) தோன்றுதற்கண் வினேச் சொற்கு ஈருய்ப் புலப்படும். தினே இரண்டே, பால் ஐந்தே என வரையறுத்தற்கு 'இருதிணமருங்கின் ஐம்பால்’ என்ருர், பதினேரெழுத்தும் என்றது, பாலுணர்த்தும் விகுதிகளாகிய ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்பவற்றை. இங்கு ஈற்று நின்று இசைக்குமென்றது ணகாரமும் ளகாரமும், ரகாரமும், மாரும் இறுதி நின்றுணர்த்து மென்பனே நினைவுபடுத்து முறையிலும், அல்லனவற்றிற்கு வழிமொழிதலளவிலும் அமைந்தது. தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. வினையெனப் பொதுப் படக் கூறினராயினும் ஏற்புழிக் கோடலாற் படர்க்கை வினை யென்று கொள்ளப்படும் எனவும், இவை பெயரொடு வருவழித் திரியின்றிப் பால் விளக்காமையின் வினையொடுவரும் என்ருர் எனவும் இச்சூத்திரப் பொருளே விளக்குவர் சேனவரையர். இருதினேக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்ருெலிக்கும் பதினேரெழுத்தும் வினைச்சொல்லிடத்தேதான் தெளிவாகப் பாலுணர்த்துவன என்றும், இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலே விளக்கும் ஆற்றலுடையன அல்ல என்றும் ஆசிரியர் இச்சூத்திரத்தில் தெளிவுபடுத்தி யுள்ளார். இதனுல் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை கானலாம் , - இச்சூத்திரப் பொருளேயுளங்கொண்டு இருதிணை ஐம்பாலு ணர்த்தும் விகுதிகளை வினையியலில் வைத்தோதிய பவணந்தி முனிவர், தன்மை முன்னிலே படர்க்கையென்னும் மூன்றிடத்தும் சொல் தன்னையும் இருதிணை ஐம்பாற் பொருள்களையும் உணர்த்தும் முறையினே,