பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317 (உ.ம்) கண்டிகும் அல்லமோ எனவும் கண்டிசின்யானே? எனவும் தன்மைக்கண் வந்தன. புகழ்ந்திகு மல்லரோ பெரிதே எனவும், யாரஃதறிந்திசினேரே எனவும் படர்க் கைக்கண் வந்தன . உஎசு. அம்ம கேட்பிக்கும். இஃது அம்ம என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) அம்ம என்னும் சொல், யான் கூறுகின்றதனைக் கேள்’ என்று ஒருவர் மற்றவரை யழைத்துக் கேட்பிக்கும் பொருண்மையினே உணர்த்தும். எ-று. (உ-ம்) அம்ம வாழி தோழி! (ஐங்குறு-81) எனவரும். இதனைத் தழுவியமைந்தது, 437. அம்ம வுரையசை கேண்மினென் ருகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'அம்ம என்னும் இடைச்சொல், உரையசையாயும் கேண் மின் என்னும் முன்னிலே ஏவற்பொருட்கண்ணதாயும் نهgth و و என்பது இதன் பொருள். (உ-ம்) பயனின்று மன்றம்ம காமம்2 (கலி-142) என்பது உரையசை. அம்ம வாழி தோழி: (நற்-158) என்பது கேளாய் என்னும் பொருட்கண் வந்தது. உஎ.எ. ஆங்க வுரையசை. இஃது உரையசையாமாறு கூறுகின்றது. (இ.ஸ்) ஆங்க என்னும் இடைச்சொல் கட்டுரைக்கண் அசைநிலையாய் வரும். எ-று. (உ-ம்) ஆங்கக் குயிலு மயிலுங்காட்டி: எனவரும், உஎஅ. ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். இதுவும் அது.