பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #8 (இ.ஸ்) ஒப்புமையுணர்த்தாத போலும் என்னும் சொல் லும் ஆங்க என்பது போல உரையசையாம். எ-று. போலும், போல்வது என்னுந் தொடக்கத்துப் பல வாய்பாடு களும் அடங்கப் போலி எனக்குறித்தார். (உ-ம்) மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் எனவும், நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய் போல்வது உம் எனவும் வரும். அசை நிலையும் ஒரு பொருள் குறித்தல்லது நில்லாமையின் அப் பொருட்டாகும் என அதனைப் பொருளெனக்குறித்தார் ஆசிரியர். Q-6Tó。 Lif5T2 பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆயேழ் சொல்லும் அசை நிலைக்கிளவி, இஃது அசைநிலையாம் இடைச்சொற்கள் சிலவற்றைத் தொகுத் துரைக்கின்றது. (இ.ஸ்) யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது என வரும் ஏழிடைச் சொல்லும் அசைநிலையாம். எ-று. (உ-ம்) யா பன்னிருவர் மானக்கர் உளர் அகத்திய ர்ைக்கு? எனவும், புறநிழற் பட்டாளோ இவளிவட்காண்டிகா? எனவும், தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந்துக்கி எனவும், அது பிறக்கு எனவும் நோதக இருங்குயிலாலுமரோ? எனவும், பிரியின் வாழாதென்போ தெய்ய? எனவும், விளிந் தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே எனவும் வரும். இடம் வரையறுக்காமையால் இவை மூன்றிடத்திற்கும் உரிய என்பர் சேவைரையர், இங்குக் கூறப்பட்ட ஏழிடைச் சொற்களுடன், இகும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், கின்று, நின்று என்பவற்றையும் சேர்த்து, 440. யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின்குரை யோரும் போலு மிருந்திட் டன் ருந் தாந்தான் கின்று நின் றசைமொழி. எனச் சூத்திரஞ்செய்தார் நன்னூலார் .